“அரைவேக்காடு, மூளை வளர்ச்சி இல்லாதவங்க..” நோட்டாவிடம் மோடி தோற்பாரா? வேலூர் இப்ராஹிமுக்கு வந்த கோபம்
ராமநாதபுரம்: இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களை வெறும் வாக்கு வங்கிக்காக பயன்படுத்திக் கொண்டு சிறுபான்மை மக்களை நசுக்கக்கூடிய ஒரு பாசிச சக்தியாக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார் என்று, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறி இருக்கிறார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " கீழக்கரையில் இஸ்லாமியர்கள் தங்களுடைய முன்னோர்களின் சொத்துக்களை ஏழை மக்கள் பயன்படுத்துவதற்காகவும் இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை நடத்துவதற்காக தானம் கொடுத்தனர். ஆனால், திமுக பிரமுகர்களும், திமுக ஆதரவாளர்களும் அதனை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திமுகவுடைய ஆதரவு நிலையில் உள்ள ஒரு சில இஸ்லாமியர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சரை சந்தித்து இந்த அரசு துறையில் உள்ள அதிகாரிகளை சரிசெய்து கட்டப்பஞ்சாயத்து செய்து வக்பு சொத்துக்களை கொள்ளை அடிக்கிறார்கள்.

நில அபகரிப்பு
ஒரு சில இஸ்லாமியர்களுக்கும் கொடுத்து விடுகிறார்கள். அபகரித்து வைத்துள்ள வக்பு சொத்துக்களை மீட்டெடுத்து உரிய ஏழை இஸ்லாமியர்களுக்கு வீடு அமைத்து தருவது, பள்ளிக்கூடங்கள் கட்டுவது என்ற சமூக நலத்திற்கான வேலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செய்ய வேண்டும்.

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர்
ராமநாதபுரம் வரலாற்றில் இதுவரை மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் வந்தது கிடையாது. கடந்த மூன்று மாதத்திற்கு முன் இராமநாதபுரம் வந்த மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். சிறுபான்மை சமூகத்திற்கு மத்திய அரசின் திட்டங்களில் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

சிறுபான்மை நிதி
மாவட்ட நிர்வாகம் ஒரு சமுதாய நலக்கூடம், பள்ளிக்கூடம் கேட்டு கூட தமிழ்நாடு அரசின் மூலமாக மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பவில்லை.
மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்காக ரூ.5,123 கோடி நிதியை ஒதுக்கி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 சதவீதம் கிறிஸ்துவர்களும் இருக்கின்றனர். இவர்களுடைய முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாவட்ட ஆட்சியர் ஏன் பயன்படுத்தவில்லை?

திமுக மீது குற்றச்சாட்டு
இஸ்லாமியர்கள் படிக்காமல் வன்முறை சக்திகளாகவே திகழ வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணமா? இஸ்லாமியர்களை பொறுத்தவரை கல்வியறிவு பெற்றுவிட்டால் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இஸ்லாமியர்களை திரும்பத் திரும்ப மதவாதிகளாகவே சித்தரிக்க கூடிய வேலையை திமுக செய்கிறது. அதனால்தான் தன்னை தொப்பி போடாத முஸ்லிம் என்று கூறுகிறார்.

அனைத்து மதங்களையும் பாஜக மதிக்கும்
இந்த மக்களின் வளர்ச்சிக்காக எந்த ஒரு முன்னெடுப்பையும் இந்த அரசு நெடுங்காலமாக செய்யவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பாதது ஏன் என கேள்வி எழுப்ப வந்துள்ளோம். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கக்கூடிய கட்சி அனைத்து மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய கட்சி.

அரைவேக்காடுகள்
திமுகவினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், இந்து சகோதரர்கள் வந்திருக்கிறார்கள். மாவட்ட அவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும்." என்றார். மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட்டால் நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்குவார்கள் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் குறித்து அவர் கூறுகையில், "அரைவேக்காட்டு நபர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் மூளை வளர்ச்சியற்றவர்கள்." என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications