ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்படாத பிறை! தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை நோன்பு பெருநாள் என அறிவிப்பு

Google Oneindia Tamil News

ரியாத்: ஈகை திருநாள் பிறை தென்படாத காரணத்தால் தமிழ்நாட்டில் மே 3 ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு இருந்து வருகிறது.

அரபுகளின் பிறை ஆண்டின் 9 வது மாதமான ரமலானை புனித மாதமாக கருதும் உலக இஸ்லாமியர்கள் அதில் பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம்.

கிறிஸ்துவ சமுதாயத்தினரின் நற்பணிகள் ஏராளம்! தமிழக காங்கிரஸ் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து! கிறிஸ்துவ சமுதாயத்தினரின் நற்பணிகள் ஏராளம்! தமிழக காங்கிரஸ் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து!

 ரமலான் நோன்பு

ரமலான் நோன்பு


ரமலான் பிறை ஒன்று முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை அதிகாலை முதல் அந்திமாலை வரை நோன்பு இருந்து வருகின்றனர். அப்போது உண்ணாமல், பருகாமல், தவறான வார்த்தைகளை பேசாமல், எந்த பாவமான காரியங்களிலும் ஈடுபடாமல் இருந்தால் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாமிய சட்டங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு நோற்று வருகின்றனர். ரமலான் பிறை ஒன்று முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை அதிகாலை முதல் அந்திமாலை வரை நோன்பு இருந்து வருகின்றனர். அப்போது உண்ணாமல், பருகாமல், தவறான வார்த்தைகளை பேசாமல், எந்த பாவமான காரியங்களிலும் ஈடுபடாமல் இருந்தால் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாமிய சட்டங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு நோற்று வருகின்றனர்.

ஒருநாள் தாமதமாக தமிழகத்தில் ரமலான்

ஒருநாள் தாமதமாக தமிழகத்தில் ரமலான்


சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் 2 ஆம் தேதி பிறை பார்த்து அன்று முதல் ரமலான் நோன்பை நோற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் ரமலான் பிறை ஏப்ரல் 3 ஆம் தேதி தென்பட்டதை அடுத்து தலைமை காஜியால் நோன்பு அறிவிக்கப்பட்டது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் 2 ஆம் தேதி பிறை பார்த்து அன்று முதல் ரமலான் நோன்பை நோற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் ரமலான் பிறை ஏப்ரல் 3 ஆம் தேதி தென்பட்டதை அடுத்து தலைமை காஜியால் நோன்பு அறிவிக்கப்பட்டது.

தென்படாத பிறை

தென்படாத பிறை

அந்தவகையில் இன்றுடன் தமிழ்நாட்டில் 29 நோன்பை நிறைவு செய்த இஸ்லாமியர்கள் வானில் பிறையை பார்த்தனர். ஆனால், எங்கும் பிறை தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூபி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் "ஹிஜ்ரி 1443 ரமலான் மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 1-05-2022 அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களும் காணப்படவில்லை. ஆகையால் செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 03-05-2022 தேதி அன்று ஷவ்வால் மாதம் முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது. ஆகையால் ஈதுல் பித்ர் செவ்வாய்க்கிழமை 03-05-2022 அன்று கொண்டாடப்படும்." என அறிவித்துள்ளார்.

 ஈகை திருநாள்

ஈகை திருநாள்

இஸ்லாத்தில் மொத்தம் 2 பண்டிகைகள் உள்ளன. ஒன்று ஈகைத் திருநாள் என்று அழைப்படும் நோன்புப் பெருநாள். மற்றொன்று தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ் பெருநாள். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல்நாள் கொண்டாடுவதாகும். அந்நாளில் ஏழைகளுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை அவர்கள் வழங்குவது வழக்கம்.

 தியாகத் திருநாள்

தியாகத் திருநாள்

அதேபோல், தியாகத் திருநாள் என்பது துல் ஹஜ் மாதம் பிறை 10-ல் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும்போது கொண்டாடுவதாகவும். அந்நாளில் இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து கறிகளை ஏழைகள், உறவினர்களுக்கு வழங்குவார்கள்.

English summary
Crescent not sighted - Tamilnadu celebrate eid ul fitr on may 3: ஈகை திருநாள் பிறை தென்படாத காரணத்தால் தமிழ்நாட்டில் மே 3 ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X