சொந்த வீடு கட்ட.. ரூ 10 லட்சத்திற்கு 10 வயது சிறுமியை தொழிலதிபருக்கு விற்ற தாய்.. பகீர் ஆடியோ
சேலம்: சேலத்தில் தொழிலதிபரிடம் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உறவுக்கார பெண்ணிடம் சிறுமியின் தாய் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னபொண்ணு. சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், 10 வயதுடைய எனது பேத்தி சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சிறுமி மீட்பு
இந்த சிறுமியை அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு அழைத்து செல்கிறார். மேலும் அவர் பேத்தியை என்னிடம் காண்பிக்க மறுத்து வருகிறார். எனவே அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுகுறித்து சேலம் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உறவுக்காரருடன் பேச்சு
இதற்கிடையே அந்த சிறுமியின் தாய், உறவுக்கார பெண் ஒருவரிடம் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சிறுமியின் தாய் பேசும்போது, என்னுடைய குழந்தையும், நானும் நன்றாக இருக்க வேண்டும், இதற்காக தொழில் அதிபர் ரூ.10 லட்சம் கொடுத்தார்.

குழந்தை
இந்த பணத்தை வாங்கி நான் வங்கியில் போட்டு உள்ளேன். ஒரு வீட்டை கட்டிவிட்டு அங்கு சென்று விடுவேன். என்னுடைய குழந்தையை நான் கூட பார்க்க முடியாது. நான் கேட்டாலும் அவர் திட்டுவார், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நீங்கள் சென்னைக்கு கூட்டிட்டு செல்லுங்கள் என சொல்லிவிட்டேன் என கூறுகிறார். அதற்கு அந்த உறவுக்கார பெண் கூறுகையில், "உனக்கு மனசாட்சியே இல்லையா?, இவ்வளவு கேவலமாக நடந்துள்ளாயே, புள்ளையை தூக்கிக் கொடுத்துவிட்டு இப்படி அசால்ட்டாக பேசுறே, உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தேன், நீ போனை வச்சிடு" எனக் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

வழக்குப் பதிவு
இந்த ஆடியோ குறித்து சேலம் டவுன் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளை தொழிலதிபரிடம் விற்று அதில் கிடைத்த பணத்தில் வீட்டை கட்டுவதாக கூறும் தாயின் செயலை சமூகவலைதளங்களில் கண்டித்து வருகிறார்கள்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications