பாம்பை வெட்டி கறி சமைத்து கெத்து வீடியோ போட்ட இளைஞர்கள்... கொத்தாக அள்ளிய வனத்துறை
பாம்பை வெட்டி சமைத்து சாப்பிட்டதோடு அதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேட்டூர்: பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்புக்கறி சாப்பிடுவதெல்லாம் நம் ஊர் பக்கம் வழக்கமில்லை. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாம்பை பிடித்து மீன் போல வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளார் ஒருவர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் கெத்தாக வெளியிடவே, அந்த நபரை கொத்தோடு அள்ளிப்போய் சிறையில் விருந்து கொடுத்து வருகின்றனர் காவல்துறையினர்.
Recommended Video
சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியின் தங்காபுரிபட்டிணம் வட பத்ர காளியம்மன் கோவில் பகுதியில் 4 இளைஞர்கள் சேர்ந்து 6 அடி நீளமுள்ள பாம்பை மீன் வெட்டுவதை போல் வெட்டி சமையல் செய்து சாப்பிட்டனர். இதனை மொபைல் போனில் படமாக எடுத்து அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
இது மேட்டூர் பகுதிகளில் வைரலாக பரவி வருகிறது. இத் தகவலறிந்த வனத்துறையினர் பாம்பை சமையல் செய்து சாப்பிட்ட இளைஞர்களை தேடி வந்தனர்.

இது குறித்து மேட்டூர் வனச்சரக அலுவலர் பிரகாஷ் குமார் தலைமையில் சென்ற வனத்துறை அதிகாரிகள் இச்சம்பவத்தில் தொடர்புடைய சுரேஷ், 30 என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷ் உடன் இணைந்து பாம்பு கறி சாப்பிட்டவர்களையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இப்பகுதியில் சமூக விரோதிகள் மது அருந்துவது, சூதாடுவது,கோவிலுக்கு வரும் பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications