கூட்டம் சும்மா அள்ளுது.. தளபதியே காரணம்! தொல்லை பண்ணாதீங்க.. தவெக புஸ்ஸி ஆனந்த் இப்படி சொல்லிட்டாரே?

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு அறிவித்த நாளிலிருந்து தினசரி 2000 பேர் பார்வையிட்டு செல்கிறார்கள் எனவும், மாநாட்டிற்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ள நிலையில், யாரும் வந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த்.

சேலம் ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு குழுக்கள் தொகுதி பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

tvk manadu tamilaga vetri kazhagam actor vijay


இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் தமிழகம், புதுவையில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மாநாடுக்காக 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குழுவின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ள கடிதங்கள் வழங்கப்பட்டது. இதனை முறையாக பின்பற்றி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து நிர்வாகிகளிடையே தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” மாநாடு என்றால் அன்றைய தினம் தான் வா என்று அழைப்பார்கள். ஆனால் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு அறிவித்த நாளிலிருந்து தினசரி 2000 பேர் பார்வையிட்டு செல்கிறார்கள் என்றால் தமிழக வெற்றிக்கழகத்தில் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுதான் தளபதியின் பலம். மாநாட்டிற்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. யாரும் வந்து தொந்தரவு செய்ய வேண்டாம். 27 ஆம் தேதி காலை வந்தால் மட்டுமே போதும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

ஒவ்வொரு தொண்டரும், ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்கள், நகரம், கிளை என நம்ம வீட்டு விழா, தளபதி குடும்பவிழா என ஒவ்வொருவரும் தினசரி வந்து பார்க்கின்ற கட்சி தமிழக வெற்றிக் கழகம். அதுதான் தளபதி, அதுதான் தளபதியின் பலம். ஒவ்வொருவரும் பத்திரமாக வரவேண்டும் அனைவருக்கும் கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

மேலும் 56 பேர் அறிவிக்கப்பட்டார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் மருத்துவர்கள் 150 பேர் மாநாட்டில் இடத்தில் பணியாற்றுவார்கள் என்பதால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் பத்திரமாக, பாதுகாப்பாக வர வேண்டியது மாவட்ட தலைவர்கள், பணித் தலைவர்கள் ஒன்றிய, நகர தலைவர்கள் பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தாய்மார்கள் பத்திரமாக இருக்க வேண்டும். பத்திரமாக அழைத்து வரவேண்டும். அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

என்னுடைய குடும்பம், என் வீடு, என் விழா, என் தளபதியின் விழா என்று கூறி வருவது மிகுந்த மகிழ்ச்சி. இந்த மாதிரியான உறவு வேறு யாருக்கும் கிடைக்கப் போவதில்லை. இது தளபதியால் மட்டுமே சாத்தியம். மாவட்ட தலைவர்கள், ஒன்றியம், நகரம் ஆகிய பொறுப்பாளர்கள் வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் தான் தமிழக வெற்றிக்கழக மாநாடு வெற்றி மாநாடாக அமையும் .ஏதாவது வேலைகள் இருந்தால் சொல்லுங்கள் நானும் செய்கிறோம் என்று நிர்வாகிகள் ஆர்வத்துடன் என்று கேட்கிறார்கள். ஆனால் எனக்கே அங்கு வேலை இல்லை." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+