டிடிஎப் வாசனுக்கு கூட 500 பேர் வராங்க.. ஆனா திமுக விழாவுக்கு.. நடிகை விந்தியா சர்ச்சை! என்ன சொன்னார்
சேலம்: அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை விந்தியா, திமுக மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதிமுக கொள்கை பரப்பு துணை செயலராகவும், பேச்சாளராகவும் உள்ளவர் நடிகை விந்தியா. சனிக்கிழமை சேலத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை விந்தியா திமுகவைக் கடுமையாகச் சாடி பேசினார்.

கூட்டம் வரவில்லை: சேலத்தில் பேசிய நடிகை விந்தியா, "டிடிஎப் வாசன்னு பைக் ஓட்டும் பையன் ஒருத்தரு இருக்காரு.. அந்த பையன் எதாவது ஊருக்குப் போனால் கூட அந்த பையனைப் பார்க்க 500, 1000 பேர் வருகிறார்கள். கூட்டமாக வருகிறார்கள். ஆனால். கலைஞர் நூற்றாண்டு விழாவுக்குக் கூட்டம் கூடவில்லை. இது அனைவருக்குமே தெரியும்
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின், வைரமுத்துவிடம் ஒரு கோரிக்கை விடுத்தார். கருணாநிதி தொடர்பாக கவிதைப் புத்தகத்தை எழுத வேண்டும் என்று ஸ்டாலின் வைரமுத்துவிடம் கோரிக்கை விடுத்தார். கருணாநிதி வைரமுத்து குறித்து புத்தகம் எழுதினால் எதுகை இருக்கும் மோனை இருக்கும் ஆனால் உண்மை இருக்காது.
திமுக தொண்டர்கள்: 1970, 1980களில் தமிழ்நாட்டில் பல இந்தி படங்கள் ரிலீஸ் ஆகும். அந்தப் படங்கள் எல்லாமே ஹவுஸ் புல்லாக போகும். தமிழக மக்கள் அந்த படங்களைச் சென்று பார்ப்பார்கள். ஆனால், அவர்கள் யாருக்குமே அந்த படத்தில் என்ன பேசுகிறார்கள் என்பது புரியாது. ஏதோ குத்து மதிப்பாக இதுதான் பேசியிருப்பார்கள் என்று நினைத்து ஆங்காங்கே கைதட்டி ரசித்துப் பார்ப்பார்கள். அதுபோல தான் இப்போது திமுக தொண்டர்கள் நிலை இருக்கிறது.
புரிந்தாலும் புரியவில்லை என்றாலும் திமுக தொண்டர்கள் கைதட்டி ரசிப்பார்கள். அவ்வளவுதான்.. ஐந்து ஆண்டுகளுக்கு முன், செந்தில் பாலாஜி திருடன்.. அவரை கைது செய்ய வேண்டும் என்று இதே ஸ்டாலின் பேசியிருந்தார். அப்போது திமுக தொண்டர்கள் கைதட்டிக் கொண்டாடினார்கள்.
செந்தில் பாலாஜி: ஆனால், அதே செந்தில் பாலாஜிக்கு எம்எல்ஏ பதவி கொடுத்து அமைச்சர் பதவி கொடுத்து கைதாகி உள்ளே போனாலும் இலாகா இல்லாத அமைச்சராக வைத்துள்ளனர். செந்தில் பாலாஜி உத்தமர் எனச் சொல்கிறார்கள். அதற்கும் திமுக தொண்டர்கள் கைதட்டுகிறார்கள்.
பாஜக உடன் திமுக கூட்டணியில் இருக்கும் போது.. பாஜக ஒரு சிறந்த கட்சி என்றார்கள்.. அதற்கு திமுக தொண்டர்கள் கை தட்டினர். இன்று பாஜக ஒரு மதவாதி கட்சி என்கிறார்கள்.. அதற்கும் திமுக தொண்டர்கள் கை தட்டுகிறார்கள். இன்று வாக்கிற்காக நாங்கள் இஸ்லாமிய மக்களின் காவலர்கள் என்று பேசுகிறார்கள்.
நீட்: காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து நீட்டை சட்டமாகக் கொண்டு வந்ததே திமுக தான்.. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான தீர்ப்பு வந்த போது கொண்டாடியதும் இந்த திமுக தொண்டர்கள் தான். ஆனால், இன்று நீட் தேர்வை ஒழிப்போம் என்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை கொண்டு வந்தது திமுக தான். ஆனால், தமிழக இளைஞர்களும் ஜெயலலிதா அரசும் இணைந்து போராடியே ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் கொண்டு வந்தோம். நாம் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று உதயநிதி சென்று பார்க்கிறார். அங்கும் அரசியல் செய்கிறார்" என்று சாடி பேசினார்.
-
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications