சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கருப்பு ஆடு".. சர்தாரை ஓவர்டேக் செய்து.. வாயை பிளந்த வியாபாரிகள்.. 1 ஜோடி 45 ஆயிரமாமே.. யம்மாடியோவ்

நாமக்கல், சேலம் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்து முடிந்துள்ளது

Google Oneindia Tamil News

சேலம்: நாமக்கல்லில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி சக்கை போடு போட்டுள்ளது.. ஒரு ஆடு, 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விலை போனதாம்..!!

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை.. வழக்கமாக தீபாவளி என்றாலே வீடுகளில் அசைவம் சமைப்பது வழக்கம்.. இதற்காக, ஆடுகள், கோழிகள், ஏராளமாக விற்பனை செய்யப்படும்.

 Amazing Sales and goats up to rs 7 crore sold in Ettayapuram goat market ahead of Diwali festival

இதனால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதும் விற்பதும் வழக்கம். அந்தவகையில், இன்றும் நிறைய மாவட்டங்களில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் அதிகாலை முதலே கூட்டம் களைகட்டி விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளது... வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து குறிப்பாக தேனி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதும் விற்பதும் வழக்கம்... அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

ஒவ்வொரு ஆடும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரங்களை விட விலை சற்று குறைவாக இருந்ததாலும், நாளை மறுநாள் தீபாவளி என்பதாலும் விற்பனை அமோகமாக இருந்தது. கடந்தாண்டு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையான நிலையில் இந்தாண்டு ரூ.7 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாம்..

அதேபோல, சேலம் கெங்கவல்லி அருகே தீபாவளி பண்டிகையையொட்டி ஆட்டு சந்தையில் 5 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதில் 5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.. கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது, இந்த கால் கடை வாரச்சந்தையில் சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்று வர்த்தகம் செய்து வருகிறார்கள்.

இன்று சனிக்கிழமை ஆட்டு சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் வந்துள்ளது... இருந்தாலும் பண்டிகை நாள் என்பதால் வழக்கத்தைவிட ஆடுகள் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது.. அதனால், இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்... வழக்கத்தை விட 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டதில், சுமார் 5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது. இதனால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் செய்யப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்..

நாமக்கல்லில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை, ஆடு ஒன்று 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விலை போனது.புதன்சந்தை, சேந்தமங்கலம், இராசிபுரம், எருமப்பட்டி, வலையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.. இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகள், செம்மறி ஆடுகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாங்கி செல்வர்..

அவ்வளவு ஏன்? கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துகூட, வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். இன்று நடைபெற்ற சந்தையிலும், நாமக்கல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகப்பட்சமாக 45 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

ஆட்டுக் குட்டியானது 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை போனது. இதனால் ஆடுகள் நல்ல விலை போனதால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் பூரித்துபோய் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, தீபாவளிக்கு கார்த்தி நடித்த சர்தார் படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அந்த வசூலைவிட ஆட்டு விற்பனை வசூல் ஓவர்டேக் செய்துவிட்டதே என்று ஆச்சரியமாக சொல்கிறார்கள்.

English summary
Amazing Sales and goats up to rs 7 crore sold in Ettayapuram goat market ahead of Diwali festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X