சேலத்தில் போலீசாருடன் கடும் மோதல்.. பாஜக நிர்வாகிகளை தரதரவென இழுத்து சென்ற எஸ்.பி.. பரபர வீடியோ!
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ளது ஜலகண்டாபுரம். இங்குள்ள மார்க்கெட்டில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் ஜலகண்டாபுரம் மார்க்கெட்டில் கடந்த மாதம் புதிய கொடி கம்பம் நடப்பட்டது.
Recommended Video
இந்த கொடி கம்பம் உரிய அனுமதி பெறாமல் நடப்பட்டதாக கூறப்படுகிறது. அனுமதி பெறாமல் கொடி கம்பம் நட்டப்பட்டதாக கூறி ஜலகண்டாபுரம் பேரூராட்சி சார்பில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பாஜகவின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

கொடி கம்பம் அகற்றம்
இந்த நிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து ஏராளமான பாஜகவினர் இன்று ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுதிர் முருகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

பாஜக-போலீசார் தள்ளுமுள்ளு
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அதே இடத்தில் பாஜகவினர் மீண்டும் கட்சியின் கொடி கம்பத்தை நாட்டினார்கள். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பாஜகவினர் அமைத்த கொடி கம்பத்தை அகற்றினார்கள். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தரதரவென இழுத்து சென்றார்
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் மோதலாக மாறி, இரு தரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அந்த பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்த நிலையில் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்ரீ அபினவ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை மாவட்ட போலீஸ் எஸ்.பி தரதரவென இழுத்து சென்று அதிரடியாக கைது செய்தார்.

எஸ்.பி.யின் செயலுக்கு எதிர்ப்பு
இதற்கு பாஜகவினரும், அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பாஜக மாவட்ட நிர்வாகிகளை எஸ்.பி தரதரவென இழுத்து சென்று கைது செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. எஸ்.பி.யின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications