காலையில் சர்ப்ரைஸ்.. சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்
சேலம்: லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து சேலம் அக்ஹாரம் மார்கெட் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
இந்தாண்டு தமிழ்நாடு முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் எப்போதும் இரண்டாம் கட்டத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இந்த முறை முதல்கட்டத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்கிறது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கே தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. தமிழ்நாட்டில் இந்த முறை திமுக, அதிமுக, பாஜக நாதக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
பிரச்சாரம்: இதில் திமுக தான் முதல் கட்சியாகக் கூட்டணியை இறுதி செய்தது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே திமுக தனது கூட்டணியை உறுதி செய்துவிட்டது. அதன் பிறகு தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்தையும் முடித்து பிரச்சாரத்தையும் திமுக வேகமாகத் தொடங்கியது. கடந்த முறையைப் போலவே இந்த முறைு திமுக கூட்டணியில் திமுகவைப் பொறுத்த அளவில் 21 தொகுதிகளில் நேரடியாகக் களமிறங்கியுள்ளது.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் அவர் தருமபுரியில் திமுக வேட்பாளர் மணிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். அங்கே அவர் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்துப் பேசினார்.
நடந்து சென்று வாக்கு சேகரிப்பு: இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சேலம் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இன்று காலை நடைப்பயிற்சியை முடித்த அவர் பிறகு சேலம் அக்ரஹாரம் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். சேலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நடந்து சேன்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கே இருந்த பொதுமக்கள் பலரும் முதல்வருடன் ஆர்வமாகச் செல்வி எடுத்துக் கொண்டனர். இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பெரியநாக்கன்பாளையம் பகுதியில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications