சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்சார சட்டத்திருத்த மசோதா பற்றிய கேள்வி! நழுவிய எடப்பாடி பழனிசாமி! மத்திய அரசு மீது பயம்?

Google Oneindia Tamil News

சேலம்: மின்சார சட்டத்திருத்த மசோதா பற்றிய கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மழுப்பலான பதில் ஒன்றை கூறியிருக்கிறார்.

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சார சட்டத்திருத்த மசோதாவை பொறுத்தவரை 'அதெல்லாம் முடிஞ்சு போன கதை' என போகிற போக்கில் கூறிவிட்டுச் சென்றார்.

தமிழகத்தின் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஒருவரிடம் இருந்து இது போன்ற பதில் வந்திருப்பது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

வாங்கம்மா சின்னம்மா! ’பொதுக்குழு 2.0’ திட்டம் போட்ட ஓபிஎஸ்! அவசரமாய் பறந்த தூது! விடாப்பிடி எடப்பாடிவாங்கம்மா சின்னம்மா! ’பொதுக்குழு 2.0’ திட்டம் போட்ட ஓபிஎஸ்! அவசரமாய் பறந்த தூது! விடாப்பிடி எடப்பாடி

மின்சார சட்டத்திருத்தம்

மின்சார சட்டத்திருத்தம்

மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இலவச மின்சாரத் திட்டத்துக்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில் பல்வேறு ஷரத்துக்கள் இந்த புதிய மசோதாவில் இடம்பெற்றிருப்பதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.

முடிஞ்சு போன கதை

முடிஞ்சு போன கதை

இந்நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு இதிலென்ன என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வினவியிருந்தார். இதைச் சுட்டிக்காட்டி சேலத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்த விதம் தான் பெரிய ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் இருந்தது. 'அதெல்லாம் முடிஞ்சு போன கதை, இப்ப வந்து பாதிக்கும்னு சொன்னால் அதற்கென்ன பரிகாரமா தேட முடியும்' என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஏன் எதிர்ப்பு?

ஏன் எதிர்ப்பு?

மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் மாநில அரசுகள் மக்களுக்கு அளித்து வரும் இலவச மின்சாரத்துக்கு பதில் மானியத்தை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த பரிந்துரைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் மாநில மின்வாரியங்களுக்கு பதில் இனி மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடமே ஏகபோக அதிகாரம் இருக்கும்படி அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Recommended Video

    Electricity Amendment Bill | தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டதிருத்தம்.. *Politics | Oneindia Tamil
     மத்திய அரசு மீது பயம்

    மத்திய அரசு மீது பயம்

    இதனிடையே மின்சார சட்டத்திருத்த மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காததற்கு காரணம் மத்திய அரசு மீதான பயமா அல்லது கூட்டணி தர்மமா என இப்போது விவாதம் எழுந்திருக்கிறது. நெடுஞ்சாலைப் பணிகள் டெண்டர் முறைகேடு வழக்கு, அதிமுக பொதுக்குழு வழக்கு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு என எடப்பாடி பழனிசாமியை சுற்றி வழக்குகள் வரிசை கட்டி நிற்பது இங்கு கவனிக்கத்தக்கது.

    English summary
    Electricity Amendment Bill: மின்சார சட்டத்திருத்த மசோதா பற்றிய கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மழுப்பலான பதில் ஒன்றை கூறியிருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X