சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"யாரும் என்னை கடத்தல" திடீரென நேரில் ஆஜரான இளமதி.. என்ன நடந்தது.. கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு

Google Oneindia Tamil News

சேலம்: தன்னை யாரும் கடத்தவில்லை.. தன் விருப்பத்தின்பேரில்தான் கல்யாணம் நடந்தது.. ஆனால் இப்போது யாருடனும் பேச விருப்பமில்லை.. தானாகவே போனேன்.. தானாகவே திரும்பினேன்.. இப்போது அம்மாவுடனேயே செல்வதாக இளமதி விசாரணையின்போது கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் இளமதி நேரில் ஆஜர் என்ற தகவல் பரவியதால்அரசியல் கட்சிகள் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது!

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரியை சேர்ந்தவர் செல்வன் என்பவர் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார்.

தன்னுடன் வேலை பார்க்கும் இளமதி என்ற பெண்ணை காதலித்தார். இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது. இளமதியின் தந்தை பாமகவை சேர்ந்தவர் என்கிறார்கள்.. செல்வன் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

 கல்யாணம்

கல்யாணம்

அதனால் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க செல்வன் கோரிக்கை விடுக்கவும், அதன்படியே சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே பெரியார் படிப்பகத்தில் 5 நாளைக்கு முன்பு கல்யாணம் நடந்துள்ளது. ஆனால், பாமக மற்றும் கொங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் இளமதியை அன்றைய தினமே கடத்தி சென்றதாக கூறப்படுகிறது..

முற்றுகை

முற்றுகை

கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் திவிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இளமதியை இன்னும் மீட்கவில்லை.. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. இளமதியை மீட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவனும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணியும் இதே கோரிக்கை விடுத்திருந்தார்.

செந்தில்குமார்

செந்தில்குமார்

நாடாளுமன்றத்தில் திமுக எம்பி செந்தில்குமாரும் இதே கோரிக்கையை விடுத்திருந்தார். மேலும் #இளமதி_எங்கே என்று இணையத்தில் ஹேஷ்டேக்கும் உருவாக்கி பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.. இதனால் இதனால் தேசிய அளவில் இளமதி எங்கே என்ற வாசகம் திரும்பி பார்க்க வைத்தது. உண்மையிலேயே இளமதி உயிருடன்தான் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? சிசிடிவி ஆதாரங்கள் எல்லாம் இருந்தும் அவரை ஏன் மீட்க முடியவில்லை என்றுதான் பொதுமக்கள் கொந்தளித்தனர்.

இளமதி

இளமதி

இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்று மதியம் இளமதி மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தன் வக்கீலுடன் ஆஜரானார்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் பாமக, திராவிடர் விடுதலை கழகத்தினர் ஏராளமானோர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது... அப்போது போலுசார் குவிந்திருந்த கட்சி நிர்வாகிகளை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

விளக்கம்

விளக்கம்

ஆஜரான இளமதியிடம், போலீசார் விசாரணை நடத்தினார்கள்... இந்த சமயத்தில்தான் திவிக ஈரோடு மாவட்ட தலைவர் நார்த்திகர் ஜோதி அங்கு வந்து, இளமதியை சந்தித்து பேச அனுமதி கேட்டார்... அதன்படி அனுமதியும் தரப்பட்டது.. சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நார்த்திகர் ஜோதி, செய்தியாளர்களிடம் பேசும்போது, இளமதி தனது பெற்றோரிடம் செல்வதாக தெரிவித்துள்ளார் என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினார்.

தாயார்

தாயார்

ஆனால் இளமதியிடம் இரவு 8.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை.. தன் விருப்பத்தின்பேரில்தான் கல்யாணம் நடந்தது.. ஆனால் இப்போது யாருடனும் பேச விருப்பமில்லை... தானாகவே சென்று, தானாகவே திரும்பியதாக இளமதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.. இறுதியில் தன் அம்மாவுடனேயே இளமதி செல்ல விரும்புவதாக சொல்லவும், கிட்டத்தட்ட 6 மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் அவர் தாயாருடன் அனுப்பி வைத்தனர்.

மிரட்டல்

மிரட்டல்

இந்நிலையில், சாந்தி, தனது மகள் இளமதியுடன் கடந்த 10-ந் தேதி பவானி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்தார். அதில், 'என் மகள் எங்கியும் போகல.. மாயமாகவும் இல்லை.. ஆனால் பெரியார் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, செயலாளர் ஈஸ்வரன் 2 பேரும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். கடந்த 9-ந் தேதி இவர்கள்தான் என்னிடம் கத்தியை காட்டி மிரட்டி என் மகள் இளமதியை மேட்டூருக்கு கடத்தி சென்றார்கள்'" என்று தெரிவித்திருந்தார்.

விசாரணை

விசாரணை

இந்த புகாரின்பேரில்தான் பவானி போலீசார் கொளத்தூர்மணி, ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சரவணபரத், செல்வம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. விசாரணையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இதனிடையே செல்வன், திவிக நிர்வாகி ஈஸ்வரன் தொடர்ந்த வழக்கு மேட்டூர் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அதனால் நாளைய தினம் கோர்ட்டில் இளமதியும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

English summary
Salem kidnapped issue: ilamathi appear in mettur police station salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X