திமுக வேட்பாளர் அறிவிப்பால் கள்ளக்குறிச்சி Vs சேலம் யுத்தம்.. "நேரு"வை களமிறக்கி சமாளித்த "ஸ்டாலின்"
சேலம்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளராக மலையரசன் அறிவிக்கப்பட்ட உடனே அக்கட்சியில் சலசலப்பு எழுந்தது. ஆனால் அமைச்சர் கே.என்.நேருவை களமிறக்கி அதிருப்தியை சரி செய்துவிட்டாராம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
சேலம் மாவட்டத்தின் சில சட்டசபை தொகுதிகளையும் உள்ளடக்கியதுதான் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி. கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி எம்பியாக இருந்தவர்கள் ஆதி சங்கர், கவுதம சிகாமணி. இருவருமே கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள். இதனால் இந்த முறை சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட திமுக வேட்பாளர்களில் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு மலையரசன் அறிவிக்கப்பட்டார். இவரும் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்தான். இதனால் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரான சிவலிங்கம் தரப்பு கடும் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்பட்டது. இதனை வெளிப்படுத்த முதல்வர் ஸ்டாலின் நடத்திய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் சிவலிங்கம் பங்கேற்கவில்லை எனவும் கூறப்பட்டது.
கள்ளக்குறிச்சி வேட்பாளரை முன்வைத்து கள்ளக்குறிச்சியா? சேலமா? என்கிற யுத்தம் வெடிக்கிறதை புரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சேலம் மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் நேருவை களமிறக்கினார். அத்துடன் சேலம் சிவலிங்கத்தையும் முதல்வர் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சமாதான முயற்சிகளின் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் தொடங்கி ஒட்டுமொத்த கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகிகளும் சாரை சாரையாக சிவலிங்கம் வீட்டுக்கு படையெடுத்து சென்றனர். அங்கு அமைச்சர் நேருவும் முகாமிட்டிருக்க ஒருவழியாக சமாதானப்படலம் அரங்கேறியதாம். தற்போதைய நிலையில் சிவலிங்கம் தரப்புக்கு சில உறுதி மொழிகளை திமுக தலைமை வழங்கி இருக்கிறதாம். அதனால் ராஜ்யசபா எம்பியாகக் கூடிய வாய்ப்பு சிவலிங்கத்துக்கு இருக்கிறது என்கின்றன சேலம் மாவட்ட திமுக உடன் பிறப்புகள். இருப்பினும் தேர்தல் களத்தில் எப்படி சேலமும் கள்ளக்குறிச்சியும் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்பதை கண்காணிக்கவும் அண்ணா அறிவாலயத்தில் இருந்து கறாரான உத்தரவும் பறந்திருக்கிறது என்கின்றனர் உடன்பிறப்புகள். களம் பதில் சொல்லத்தான் போகிறதே!
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications