வேண்டாம் விட்ருங்க சார்..பயிரை மேய்ந்த வேலி! ‘ராட்சசன்’ போல் அத்துமீறிய கணக்கு வாத்தி! கலகலத்த சேலம்
சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சவுரியூர் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த கணித ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது போல் தற்போது தமிழகத்தில் இந்த கொடூரங்கள் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷாக் சம்பவம்
சிறுமிகளை தெரியாதவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவத்தால் வெளியே அனுப்ப பெற்றோர் தயங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் நபர்களும், பள்ளி ஆசிரியர்களும் சிறுமிகளிடம் அத்து மீறுவதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. அந்த வகையிலான ஒரு சம்பவம் தான் சேலம் மாவட்டத்தில் அரங்கேறி இருப்பதோடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த பகீர் பின்னணி தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

கணித ஆசிரியர்
மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே உள்ள சவுரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அழகப்பன் என்பவருடைய மகன் சரவணகுமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை
இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா தீவிர விசாரணை செய்து கணித ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பெற்றோர் அச்சம்
இந்நிலையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த தகவல் கிடைத்ததும் அப்பள்ளிக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் பள்ளியின் தலைமையாசிரியையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அச்சத்தையும் விதைத்திருக்கிறது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications