சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் சொந்தமாக பேசுவதாக தெரியவில்லை.. யாரோ எழுதி தருகிறார்கள்.. முதல்வர் பழனிச்சாமி

Google Oneindia Tamil News

சேலம்: திமுக தலைவர் ஸ்டாலின் சொந்தமாக பேசுவதாக தெரியவில்லை.. மற்றவர்கள் யாரோ எழுதி கொடுப்பதை பேசுவதாக தெரிகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியினர் போட்டியிடுவது கேட்கிறீர்கள்.. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை வரை கால அவகாசம் உள்ளது எல்லோருக்கும் அந்தந்தப் பகுதிகளில் போட்டியிட ஆர்வம் உள்ளது.

1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் பலியாக காரணமாக இருந்தது திமுக.. முதல்வர் பழனிசாமி திடுக் குற்றச்சாட்டு! 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் பலியாக காரணமாக இருந்தது திமுக.. முதல்வர் பழனிசாமி திடுக் குற்றச்சாட்டு!

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அவரவர் கிராமத்தில் அவரவர் கட்சியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து கூட்டணி கட்சிகளும் எதிர்பார்ப்பது இயல்பு. அப்படித்தான் கூட்டணி கட்சியினர் சிலர் போட்டியிட்டு இருப்பார்கள். இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடக்கிறது ஒருமித்த கருத்துடன் அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் என்றார்.

திமுக காரணம்

திமுக காரணம்

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருபது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி, உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. 2016-ல் உள்ளாட்சி தேர்தலை திமுகதான் நிறுத்தியது.

திமுகவுக்கு மனசு இல்லை

திமுகவுக்கு மனசு இல்லை

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் வார்டு மறுவரையரையும் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது . இதனை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டோம் ஆனால், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுகவுக்கு மனசு இல்லை. அவர்களுக்கு எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்து உள்ளது.

சுயமாக பேசவில்லை

சுயமாக பேசவில்லை

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து திமுகவினர் நீதிமன்றம் செல்கிறார்கள். இட ஒதுக்கீடு, வார்டு மறுவரையறை சரியில்லை என்றால், எந்த மாவட்டத்தில், ஒன்றியத்தில் இவை சரியாக இல்லை என்பதைச் சரியாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால்வேண்டுமென்றே திட்டமிட்டு, மக்கள் மத்தியில் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதைத்தான் ஸ்டாலின் பேசுகிறார் என்று நினைக்கிறேன். அவர் சொந்தமாகப் பேசுவது போன்று எனக்குத் தெரியவில்லை" என்றார்.

English summary
Tamil Nadu chief Minister edappadi palanisamy said DMK leader mk stalin did not speak his own , he may spoke others write
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X