Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவனுக்கு கல்யாணமே ஆகாது போலயே! 90’ஸ் மகனுக்காக தாய் செய்த செயல்! இப்படியா? வெலவெலத்த சேலம்!

Subscribe to Oneindia Tamil

சேலம் : சேலம் அருகே நீண்ட நாட்களாக தனது மகனுக்கு திருமணம் நடக்காததால் தாய் ஒருவர் செய்த செயல் காரணமாக இருவருமே தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடந்தது என விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாகவே 90'ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமே ஆவதில்லை என்ற ஒரு கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல பலருக்கும் திருமணமாகிவிட்டது. வெகு ஒரு சிலருக்கே திருமணம் ஆகவில்லை.

ஆனால் 90'ஸ் கிட்ஸ் என்றாலே திருமணம் ஆகாது என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்படுவதைப் பார்த்து இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது தாயிடம் கூற, அவரும் இதில் உண்மை இருக்கிறது போல நினைத்து , அதனால் ஒரு மொக்கை ப்ளான் போட்டு போலீஸிடம் சிக்கியிருக்கிறார்கள்.

 ஷாக் சம்பவம்

ஷாக் சம்பவம்

வேறு எங்கும் இல்லை நம்ம சேலம் மாவட்டத்தில் தான். சேலம் மாவட்டம் சரக்குப்பிள்ளையூர் நாகலூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான லட்சுமி. கணவரை இழந்த இவரது மகன் ரமேஷ் குமார் 27 வயதான நிலையில் படித்து முடித்துவிட்டு தனக்கு கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்து வந்திருக்கிறார். நிரந்தர வேலை வருமானம் எதுவும் கிடைக்காத நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என லட்சுமி பல இடங்களில் பெண் பார்த்து இருக்கிறார். பல இடங்களில் முயன்றும் ரமேஷ் குமாருக்கு திருமணம் கைகூடாமல் போயிருக்கிறது.

90’ஸ் கிட்ஸ்

90’ஸ் கிட்ஸ்

அதற்கு வேறு பெயர் காரணங்கள் இருக்க 90'ஸ் கிட்ஸ் என்பதால் தனக்கு திருமணம் நடக்கவில்லை என முகநூலிலும் புலம்பி வந்து இருக்கிறார் ரமேஷ் குமார். இந்நிலையில்தான் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ரமேஷ் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. வேறு எங்கும் பெண் கிடைக்காததால் வேறு வழியின்றி அந்த 17 வயது சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என லட்சுமி முடிவு செய்து இருக்கிறார். எப்படியும் தனது மகனுக்கு பின் கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்பதால் சிறுமியை கடத்தி திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இருக்கிறார் லட்சுமி.

சிறுமி கடத்தல்

சிறுமி கடத்தல்

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது 22ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருக்கிறார். வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அவரை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே மகனுக்கு திருமணம் செய்து வைக்கவும் திட்டம் நடந்திருக்கிறது. இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 தாய் மகன் கைது

தாய் மகன் கைது

வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது லட்சுமி மற்றும் ரமேஷ் குமாரின் நடத்தையில் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதை அடுத்து அவர்களிடம் விசாரித்த போது வீட்டுக்குள்ளேயே சிறுமியை அடைத்து வைத்து திருமணம் செய்ய திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. இதை அடுத்து சிறுமி மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மகனுக்காக திருமணம் செய்து வைக்க சிறுமியை கடத்திய தாயையும் மகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+