சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலம் சிறைக்கு நெல்லை கண்ணன் மாற்றம்.. 24 மணி நேரத்திற்குள் 750 கி.மீ பயணம்.. ஆதரவாளர்கள் அதிருப்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது - வீடியோ

    சேலம்: நெல்லை கண்ணன், பாளையங்கோட்டை சிறைச்சாலையிலிருந்து சேலம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசிய, தமிழறிஞர் நெல்லை கண்ணன், நேற்று இரவு பெரம்பலூரில் கைது செய்யப்பட்டார்.

    Nellai Kannan shifted to Salem jail

    பிறகு அவர் நெல்லை அழைத்து வரப்பட்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டடது. பிறகு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நெல்லை கண்ணனை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரினர். அதே நேரத்தில், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நெல்லை கண்ணன் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பாபு, நெல்லை கண்ணனை வரும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவித்தார்.

    "சோலி".. இது லோக்கல் லேங்குவேஜ்.. நெல்லை கண்ணன் தப்பான அர்த்தத்தில் பேசலை.. ஆதரவாளர்கள்

    இதையடுத்து, மதியம் 2 மணி அளவில் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் நெல்லை கண்ணன். ஆனால், பிறகு அங்கும் அவரை அடைக்காமல், சேலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை கண்ணன் நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தவர். இந்த நிலையில், அவர் பெரம்பலூரிலிருந்து, நேற்று இரவோடு நெல்லை அழைத்து வரப்பட்டாார். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்பிறகு, நெல்லை, பாளையம்கோட்டை சிறைக்கும், பிறகு சேலம் சிறைக்கும், மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூரிலிருந்து திருநெல்வேலிக்கு சுமார் 360 கி.மீ தூரம். நெல்லையிலிருந்து, சேலத்திற்கு, சுமார் 385 கி.மீ தூரம். ஆக மொத்தம் வெறும் 24 மணி நேரத்திற்குள்ளாக, 750 கி.மீ தூரத்திற்கு, நெல்லை கண்ணன் சாலை மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கு அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    English summary
    Nellai Kannan shifted to Salem jail from Tirunelveli, and he made to travelled around 750 KM in 24 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X