கேடிஎம் பைக்கை ஆசையாக கேட்ட சிறுவன்.. பாசத்தோடு உருவாக்கிய தந்தை.. போலீஸார் வழக்குப் பதிவு
சேலம்: பிறந்த நாளன்று தனது ஆசை மகனுக்கு அசத்தலான கேடிஎம் பைக்கை தயார் செய்து கொடுத்த தந்தை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ். இவர் அதே பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரது மகன் மோகித் கேடிஎம் பைக் மீது ஆசை கொண்டுளளார். சிறுவன் மோகித் தினந்தோறும் தனது தந்தையிடம் தனக்கு கேடிஎம் பைக் வேண்டும் என அடம் பிடித்துள்ளார்.

தங்கராஜ்
இதனை நிறைவேற்றும் வகையில் தங்கராஜ், தான் பணியாற்றும் இடத்திலேயே மகன் மோகித் ஆசைப்பட்ட கேடிஎம் பைக்க தயார் செய்ய முடிவு செய்தார். அதனை எடுத்து ஒரு ஸ்கூட்டி வாகனத்தின் இன்ஜினை எடுத்து அதனை கேடிஎம் பைக் ஆக மாற்றி சிறுவனுக்கு ஏற்றார்போல் ஒரு புதிய பைக்கை தயார் செய்தார்.

பரிசு
பின்னர் அந்த பைக்கை தன் மகனுக்கு பரிசாக வழங்கியுள்ளார். தான் ஆசைப்பட்ட தனக்கு கிடைத்த மகிழ்ச்சியில் அதே வாகனத்தில் தன் தந்தையை அமரவைத்து மோகித் சாலையில் மகிழ்ச்சியாக ஓட்டிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

அரசு அனுமதி
இது ஒருபுறம் இருந்தாலும் கூட சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட கற்றுத் தருவது சட்டப்படி குற்றமாகும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் அரசு அனுமதி இல்லாமல் இருசக்கர வாகனத்தை உருமாற்றம் செய்தது, சிறுவனை இரு சக்கர வாகனம் இயக்க வைத்தது என 3 பிரிவுகளின் கீழ் தங்கராஜ் மீது சேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேடிஎம் பைக் சிறப்பம்சங்கள்
இந்த கேடிஎம் பைக்குகள்தான் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை விரும்புகிறார்கள். இதன் ஆரம்ப விலை ரூ 1.70 லட்சமாகும். அட்ஜஸ்டபுள் ஹேண்டில் பார், 13.7 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க், புதுவிதமான விண்ட் ஸ்கிரீன, பெரிய அளவிலான ஏர் பாக்ஸ், ஸ்ப்ளிட் ஸ்டீல ட்ரெல்லீஸ் ஃபிரேம், புதிய டெயில் லைட் டிசைன், டியூயல் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும்.












Click it and Unblock the Notifications