அடேங்கப்பா.. பார்க்கிங்-க்கு மட்டும் 20 ஏக்கரா.. திருச்சியை விஞ்சும் சேலம் பாஜக இளைஞரணி மாநாடு
சேலம்: நாளை(பிப்.21) நடைபெறவுள்ள பாஜக மாநில மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.
தமிழக பாஜகவின் இளைஞரணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனி விமானம் மூலம் சேலம் வருகிறார்.
மத்திய அமைச்சரின் வருகையையொட்டி சேலத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, தேசிய பாதுகாப்பு படையினர் 20 பேர் சேலத்திற்கு வந்துள்ளனர்.

இந்தநிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சட்டமன்றப் பேரவையின் கட்டிட வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் முருகன், இளைஞரணி தலைவர் வினோஜ் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 20 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரவேற்க மாநாடு திடலின் இருபுறமும் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு சாலையோரங்களில் கட்சி கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2013ம் ஆண்டு திருச்சியில் பாஜக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. அப்போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி, மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். தற்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இளைஞரணி மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications