தவெக கட்சியுடன் பேசி வருகிறோம்.. தைலாபுரம் வருகிறாரா விஜய்? உறுதி செய்த ராமதாஸ் தரப்பு!
சேலம்: விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ அருள் உறுதி செய்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக திமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் விருப்பம் காட்டி வந்த நிலையில், திருமாவளவன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன் வராததால், ராமதாஸ் தரப்பு அடுத்தக் கட்ட முயற்சிகளை தொடங்கியுள்ளது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் ஏற்பட்டு, இரு தரப்பும் தனித்தனி அணிகளாக பிரிந்து கிடக்கின்றனர். இதனால் தேர்தலையும் இரு அணிகளும் தனியாகவே சந்திக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே அன்புமணி தரப்பு பாமக, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது. இதனால் ராமதாஸ் அணியை கூட்டணியில் சேர்க்க அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதனால் ராமதாஸ் தரப்பு பாமக ஆதரவாளர்கள், திமுக தலைமையுடன் பேசி வந்தனர். அமைச்சர் எவ வேலு மூலமாக திமுக தலைமையை சந்திக்க முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விசிக தலைவர் திருமாவளவன், பிடிவாதமாக பாஜக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.
இதனால் திமுக தலைமையும் ராமதாஸ் தரப்பை கைவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ராமதாஸ் கடந்த 2 நாட்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு அடுத்ததாக விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
இதனை ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருளும் உறுதி செய்திருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அருள் பேசுகையில், பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பு தான். தமிழ்நாட்டில் ராமதாஸ் கை காட்டுகிறவரே அடுத்த முதல்வர். இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும். தவெக தலைவர் விஜய்யை இளைஞர்கள் தேனீக்கள் போல் மொய்த்து வருகின்றனர்.
அரசியல் களத்தில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. சட்டசபைத் தேர்தலில் 3வது அணி உருவாவதில் எந்த தவறும் இல்லை. தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாமகவுக்காக பணியாற்றிய ஜான் ஆரோக்கியசாமி மூலமாக இந்த பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
-
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications