சேலம் அயோத்தியாப்பட்டணம் ரயில் பெட்டிக்குள் ஜாலியான அனுபவம்.. ஹாயா உட்கார்ந்து சாப்பிட சூப்பர் வழி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் மெயின் ரோட்டில், ரெயில் பயண சிலிர்ப்பை அப்படியே ஓட்டலுக்குள் கொண்டுவரும் சூப்பரான "ரெயில் பெட்டி உணவகம்" இப்போது திறக்கப்பட்டுள்ளது! வழக்கமாக போர் அடிக்கும் ஹோட்டல் ஸ்டைலை ஓரம் கட்டிவிட்டு, ரெயில் பெட்டிக்குள்ளேயே உட்கார்ந்து பறக்கும் சவுண்டுடன் சுடச்சுட சாப்பிடும் இந்த வித்தியாசமான அனுபவம், சேலம் மக்களையும், உணவுப் பிரியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

ரெயில்வேயின் நிலங்கள் மற்றும் யாருக்கும் பயன்படாமல் துருப்பிடித்து கிடந்த பழைய ரயில் பெட்டிகளை வைத்து, கோடிக்கணக்கில் Non-Fare Revenue Concept மாஸ்டர் பிளான் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Ayothiyapattinam Railway Coach Restaurant

சேலம் ரயிலில் ஓட்டல்

இந்த உணவகத்தை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பன்னாலால் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோட்ட கூடுதல் மேலாளர் சரவணன், கோட்ட வணிக மேலாளர் மல்லிகா, முதுநிலை கோட்ட மின் பொறியாளர் பல்ராம்குமார், கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் பாண்டே, அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்திய ரயில்வே தனது நிலங்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத பழைய பெட்டிகளை பயன்படுத்தி, பயணிகளுக்கான வருவாய் அல்லாத பிற ஆதாரங்களை பெருக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது... சேலம் - விருத்தாசலம் ரயில் பாதையில் உள்ள அயோத்தியாப்பட்டணம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே 1000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த ஓட்டல் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் உணவகம்

பயன்பாடு இல்லாமல் இருந்த பழைய ரெயில் பெட்டி ஒப்பந்ததாரர் மூலம் புதுப்பிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் இந்த ஓட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் கட்டணமில்லா வருவாய் கொள்கையின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு 46 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய பெட்டிகளை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருவது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவியாக உள்ளது.

இந்த ஓட்டல்கள் ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இருப்பதால், ரயிலில் பயணிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வந்து செல்லலாம். ரயில் பெட்டியின் உள்பகுதி ஏசி வசதி, லைட் வசதி, சீட்டுகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சப்பணம் கொட்டி உட்காரும் வசதியான இருக்கைகள் கூட என வேற லெவலில் ஜொலிக்கிறது.

மோஸ்ட் வான்டட் அடையாளம்

அதனால்தான், ரயிலில் அடித்து பிடித்து பயணிக்கும் பயணிகள் மட்டுமல்லாமல், வெளியூர்வாசிகளும் உள்ளூர் பொதுமக்களும் இந்த ஓட்டலுக்கு படையெடுத்து குவிகிறார்களாம்.

இங்கு தென்னிந்திய, வடஇந்திய உணவு வகைகள், ஃபாஸ்ட் ஃபுட், உணவுகள், டிபன்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இரவு நேர பயணிகளின் வசதிக்காக இந்த உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.

சேலத்தை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், போத்தனூர், மேட்டுப்பாளையம் மற்றும் உதகமண்டலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பழைய ரயில் பெட்டிகளை குப்பையாக ஒதுக்காமல், அவற்றை அழகாக்கி மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருவது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்த ஒரு முயற்சியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது... மொத்தத்தில் சேலத்தின் மோஸ்ட் வான்டட் அடையாளமாக மாறிப்போன இந்த ரெயில் பெட்டி ஓட்டல் இப்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+