பழரசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து.. கண்டக்டரை துடிதுடிக்க கொலை செய்த காதலி.. சேலத்தில் பகீர்
சேலம்: பழரசத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து பஸ் கண்டக்டரை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலி கொலை செய்த சம்பவம் சேலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் சுப்பிரமணி (49). தனது மனைவி புஷ்பாவை பிரிந்து 20 வருடங்களாக தளவாய்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சித்ரா என்பவரது மகள் சர்வேஸ்வரி (35). இவர் கணவரை பிரிந்து தாயாருடன் .சேலம் தளவாய்பட்டியில் வசித்து வருகிறார். சித்ரா இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.

தனியாக குடும்பம்
கணவரை பிரிந்து வாழ்ந்த வந்த சவேஸ்வரியுடன் கண்டக்டர் சுப்பிரமணிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, சர்வேஸ்வரியின் சகோதரி உமாமகேஸ்வரி(37)யும் கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவருடனும் சுப்பிரமணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதெரிந்து சர்வேஸ்வரி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின்னர் உமாமகேஸ்வரியும், சுப்பிரமணியும் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

விசாரணை
வெள்ளிக்கிழமை இரவு சுப்பிரமணி வீட்டில் உள்ள கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து உறவினர்களின் புகாரின்பேரில் சேலம் இரும்பாலை போலீசார் நேரில் வந்து பார்த்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட நிலையில் சுப்பிரமணி இறந்துகிடந்தது தெரியவந்தது.உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.

சிக்கிய உமா
விசாரணையில் அதில், சுப்பிரமணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்து ஆய்வு செய்ததில், வீட்டுக்கு 2 ஆண்கள் உமா மகேஸ்வரியுடன் சென்று வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உமாமகேஸ்வரியை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பழரசத்தில் மருந்து
உமா மகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களிடமும் பழக்கம் இருந்ததை அறிந்து சுப்பிரமணி கண்டித்திருக்கிறார். அடித்தும் துன்புறுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த உமா, சுப்பிரமணி உயிரோடு இருந்தால், இஷ்டப்படி சந்தோஷமாக இருக்க முடியாது என நினைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது 2 ஆண் நண்பர்களான செங்காட்டூரை சேர்ந்த நாகராஜன், கண்ணன் ஆகியோரை வரவழைத்தார். சுப்பிரமணிக்கு தூங்கும் போது இரவில் சாத்துக்குடி பழ ரசம் கொடுத்துள்ளார். அதில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும், சுப்பிரமணி கட்டிலில் மயங்கி கிடந்தார். பின்னர் 2 நண்பர்களையும் வீட்டிற்கு வரவழைத்து, சுப்பிரமணியின் கை, கால்களை இறுக்கி பிடித்து தலையணையால் முகத்தை அமுக்கியும், கழுத்தை நெரித்தும், மர்ம உறுப்பை நசுக்கியும் கொலை செய்துள்ளனர்.

போலீசார் தகவல்
தனது ஆண் நண்பர்கள் அங்கிருந்து சென்றபிறகு, உமாமகேஸ்வரி சுப்பிரமணி பேச்சு மூச்சு இன்றி கிடப்பதாக, பெற்றோர், உறவினர்கள் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரி, அவரது நண்பர்கள் நாகராஜன், கண்ணனை கைது செய்தனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications