கண்ணே கலங்கிடுச்சு.. பூஜா சொன்னதை கேட்டு அதிர்ந்த சேலம்.. பரிதாப மணிகண்டன்.. ஒரே உருக்கம்

சேலத்தில் இளம்பெண் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் கலங்கடித்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சேலம்: இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம், சேலம் மக்களை கலங்கடித்து வருகிறது.

சேலம் களரம்பட்டி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.. 31 வயதாகிறது.. இவர் தறி வேலை செய்து வருகிறார்.. 4 வருடங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு திருமணம் நடந்தது.

மனைவி பெயர் பூஜா.. 24 வயதாகிறது.. இவர்களுக்கு வினாயக் என்ற இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறான்..

 Salem young woman commits suicide after writing a letter Pl. donate my body

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, பூஜா திடீரென வீட்டில் தூக்குப் போட்டு கொண்டார்.. இதை பார்த்த உறவினர்கள் பதறிப்போய் அவரை மீட்டு, உடனடியாக சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.. இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் பறந்தது.

விரைந்து வந்த போலீசார் பூஜாவின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. பிறகு விசாரணையையும் துவக்கினர்.. அப்போதுதான், பூஜா தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததை போலீசார் கண்டறிந்தனர்..

அந்த கடிதத்தில், "தற்கொலை செய்து கொள்ளும் முடிவை நான்தான் எடுத்தேன்.. இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. என்னுடைய வீட்டின் மீது வாங்கிய கடன் நிறைய உள்ளது.. அதனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தேன்.. எனக்கு முதுகு தண்டுவட வலியும் அதிகமாகிவிட்டது. அதற்காக நிறைய மருத்துவ செலவுகள் செய்ததால், கடன் சுமையும் அதிகமாகிவிட்டது. அதனால், என்னுடைய உடலை ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து, அதில் வரும் பணத்தை கொண்டு என்னுடைய வீட்டு கடனை அடைத்து விடுங்கள்" என்று பூஜா அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி உள்ளார்.

பூஜாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், சேலம் சப்-கலெக்டர் விஷ்ணுவர்த்தினி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+