கொரோனா எதிர்ப்பு சக்தி.. விருதுநகர், சென்னை டாப்! தடுப்பூசி பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை: அமைச்சர்
சேலம்: தமிழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் 70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கொள்கலன்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் இதுவரை 2.53 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 ஆக்சிஜன் கொள்கலன் நிலையங்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆக்சிஜன் கொள்முதல் நிலையங்கள்
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் சார்பில் 70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கொள்கலன் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் சேலம் உள்பட 21 மருத்துவமனைகளில் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு சேலத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள 1462 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்றப்பட்டது. மேலும் சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்பட்டன. மூன்றாவது அலை அச்சுறுத்தல் இருப்பதால் சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் கூடுதல் வசதிகள் மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே மூன்றாவது அறை குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் மூன்றாவது அலை இதுவரை வரவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசின் அனைத்து துறைகளும் வேகமாக இயங்கி வருகின்றன.

ஆட்சி பொறுப்பு
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது நாள் ஒன்றுக்கு 230 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. கட்டமைப்புகளை உருவாக்கியதன் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய குறைபாடு என்பது இல்லை. அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன இதுபோன்ற ஒப்பந்த முறையை முழுமையாக ரத்து செய்து வருகிறோம் இதன் மூலம் தனிநபர் மட்டுமே சம்பாதித்து வருகின்றனர் இந்த முறையை ரத்து செய்து அனைத்து மருத்துவமனைகளிலும் நேரடி நியமனம் ஏற்படுத்த உள்ளோம்.

கேரள எல்லையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை
கேரள எல்லைப்பகுதியில் 13 இடங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் வெளிமாநில பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

72 லட்சம் தடுப்பூசிகள்
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை. ஜூலை மாதத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 72 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை முழுமையாக பொதுமக்களுக்கு செலுத்தியதை பாராட்டும் விதமாக மத்திய அரசு 19 லட்சம் கூடுதல் தடுப்பூசிகளை கடந்த ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு 79 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இதுவரை 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மேலும் தடுப்பூசிகள் படிப்படியாக வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இரண்டு கோடியே 53 லட்சத்து 57 ஆயிரத்து 300 டேஸ் தடுப்பூசகள் போடப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியில் விருதுநகர் டாப்
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதமும், சென்னையில் 82% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 40 சதவீதம் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அந்த மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications