சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

89 ஆண்டு கால மேட்டூர் அணை வரலாற்றில்.. மே மாதம் கடைசியாக தண்ணீர் திறப்பு எப்போது?.. வெதர்மேன் டேட்டா

Google Oneindia Tamil News

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து மே மாதத்தில் கடைசியாக தண்ணீர் திறக்கப்பட்டது 1945 ஆம் ஆண்டு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவிலிருந்து வங்காள விரிகுடா பூம்புகார் வரை செல்லக் கூடிய காவிரி நீர் வழித்தடங்களில் அணை கட்டுவதற்கான ஆய்வு சுமார் 90 ஆண்டுகள் நடைபெற்றது. 1924ஆம் ஆண்டு பாலமலைக்கும் சீத்தாமலைக்கும் இடையே அணை கட்ட ஆங்கிலேய அரசு முடிவு செய்து 1925ஆம் ஆண்டு பணிகளை தொடங்கியது.

இதையடுத்து 1934 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டு அதே ஆண்டில் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி இந்த அணை பாசனத்திற்காக திறந்துவிடப்படுகிறது.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு சரி! அதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு சரி! அதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!

 மேட்டூர் அணை

மேட்டூர் அணை

இந்த நிலையில் மேட்டூர் அணை வரலாற்றில் 1942 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மே மாதங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டும் மே மாதம், அதாவது ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை பூத்தூவி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மே மாதம்

மே மாதம்

நீண்ட காலத்திற்கு பிறகு மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவுடன் ஜூன் 12 ஆம் தேதிக்குள் முன்பு சரியாக 3ஆவது முறை திறக்கப்பட்டுள்ளது.

 3 ஆயிரம் கனஅடி

3 ஆயிரம் கனஅடி

ஆரம்பத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறும். இன்று மாலையோ அல்லது நாளையோ வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும். ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்னர் மேட்டூர் இன்று 11 ஆவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. 89 ஆண்டுகால மேட்டூர் அணை வரலாற்றில் மே மாதத்தில் 5 ஆவது முறை மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணை திறப்பு

கடைசியாக மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது 1945 ஆம் ஆண்டில்தான். அப்போது அணையின் கொள்ளளவு 60 டிஎம்சி மட்டுமே. ஆனால் இன்று 90 டிஎம்சி கொள்ளளவு உள்ளது. 1924 ஆம் ஆண்டு காவிரியில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அணை கட்டும் பணிகள் தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு வினாடிக்கு 4.56 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்தது.

மே மாதம் 5 முறை திறப்பு

மே மாதம் 5 முறை திறப்பு

இதையடுத்து 1961, 1977, 1989, 2005 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மற்ற ஆண்டுகளை ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டு தமிழக விவசாயிகளுக்கு சிறந்த ஆண்டு என்றே சொல்லலாம். மே மாதத்தில் 1942, 1943, 1944, 1945, 2022 ஆகிய ஆண்டுகளில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says about water released from Mettur dam and the last time mettur dam was opened in may month was in 1945.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X