கத்தியால் ஓங்கி குத்திய மனைவி.. அலறிய கணவன்.. ஓடிவந்த மாமியார்.. அவருக்கும்.. மிரண்ட சேலம்

Subscribe to Oneindia Tamil

சேலம் : சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தகராறு செய்த கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தடுத்த மாமியாரையும் மருமகள் கத்தியால் தாக்கியது சேலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கணவன் மனைவி சண்டை குடும்பத்தில் பல காரணங்களால் வருகின்றன. மது பழக்கம், ஒருவரை ஒருவர் சந்தேகப்படுதல், கள்ளக்காதல் விவகாரம், மாமியார் கொடுமை, மருமகள் கொடுமைகள் என பல காரணங்களால் கணவன் மனைவி சண்டை வருகின்றன.

பல சண்டைகளுக்கு மதுபழக்கம் மற்றும் கள்ளக்காதல் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அப்படி நடக்கும் சண்டைகள் சில சமயங்களில் கொலைகளில் முடிகின்றன. பெரும்பாலும் பெண்கள் தான் இதில் பாதிக்கப்படுகிறார்கள்.

சேலம்

சேலம்

சில சமயம் ஆண்களும் பாதிக்கப்படும் சம்பவம் நடக்கிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது . அடிக்கடி தகராறு செய்த கணவனை மனைவி கத்தியால் குத்தினார். அப்போது தடுத்த மாமியாரையும் மருமகள் கத்தியால் தாக்கினார்.

திருமணம்

திருமணம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் பாலமுருகன் வயது 32. இவருக்கு ஒரு வருடம் முன்பு இலக்கியா (வயது 26) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது.

மாமியாகும் விழுந்தது

மாமியாகும் விழுந்தது

இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இலக்கியா கத்தியால் பாலமுருகனை தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற பாலமுருகனின் தாயார் ஜோதியையும் தாக்கியுள்ளார்.

இலக்கியா கைது

இலக்கியா கைது

இதனால் ரத்த வெள்ளத்தில் இவர்கள் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பாலமுருகன் மற்றும் ஜோதியை எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து எடப்பாடி போலீசார் இலக்கியாவை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

நத்தம் குற்றம்

நத்தம் குற்றம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட முன் பகையால் பழிக்குப்பழியாக விவசாயி அரிவாளால் வெட்டிகொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரியமலையூர்- பள்ளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை(வயது 65). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் ராசு(80). இவர்கள் இருவரும் உறவினர்கள்.இவர்களுக்கிடையே பல வருடங்களாக சொத்து பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராசு மகன் வெள்ளைகண்ணுவை வெள்ளை உறவினர் தங்கராஜ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் சூழ்நிலையில் இன்று காலையில் இவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. இதையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரம் அடைந்த ராசுவின் மகன் அர்ஜுனன் (வயது 36), தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெள்ளையை சராமரியாக வெட்டினார்.

வெட்டினார்கள்

வெட்டினார்கள்

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வெள்ளை சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.பின்னர் இறந்த போன வெள்ளையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அர்ஜுனன்(36), ஆறுமுகம்(32) ஆகிய இரண்டு பேரை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய அருவாளை கைப்பற்றினர் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். காயமடைந்த ராசு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பழிக்குப்பழியாக நடைபெற்ற கொலை சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+