பணம் கொடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலின்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்.. டிடிவி தினகரன் நறுக்
சேலம்: அதிமுகவில் பணம் கொடுத்தால் ஸ்டாலின் கூட பொதுச் செயலாளராகலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அமமுக சார்பில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது டிடிவி தினகரன் பேசுகையில் தனி நபர்களை விலைக்கு வாங்கி ஆதரவு என்ற பெயரில் முயற்சிக்கிறார். இன்னொருவர் அதை தடுக்க முயற்சிக்கிறார்.

பொதுச் செயலாளர்
பொதுச் செயலாளர் என்ற தலைமை பதவியானது கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். எல்லாமே காசுதான். திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவில் இருக்கும் பேரூராட்சி செயலாளருக்கு ரூ 50 லட்சம் அப்படியே மேலே போய் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் போதும்.

பொதுக் குழு
திமுக தலைவர் ஸ்டாலின்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என அறிவித்துவிடுவார்கள். இவர்களாகவே பொதுக் குழுவை கூட்டி அறிவித்துவிடுவார்கள். பண மூட்டைகளோடு அலைந்து நிர்வாகிகளை விலைக்கு வாங்கி, எப்படியாவது ஜெயலலிதாவின் பதவியைப் பிடித்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அலைந்து கொண்டிருக்கிறார்.

எம்ஜிஆர்
இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்காகவும், தி.மு.க.வில் தமக்கு ஏற்பட்ட அநீதி வேறு யாருக்கும் இழைக்கப்படக் கூடாது என்பதற்காகவும், பொதுச்செயலாளர் என்பவர், கட்சியின் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டுமென எம்ஜிஆர் எழுதி வைத்திருக்கிறார். இந்த நடைமுறையை மட்டும் யாராலும் திருத்த முடியாது என்கிற விதியை கட்சி சட்டதிட்டங்களில் எம்ஜிஆர் சேர்த்துள்ளார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா பொதுச் செயலாளர் ஆன போதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டன. ஐபிஎல் வீரர்களை ஏலம் எடுப்பது போல் அதிமுக நிர்வாகிகளை விலைக்கு வாங்கி பொதுச் செயலாளர் பதவியை அடைய முயற்சிகள் நடக்கின்றன. அமமுக தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். அதிமுகவை தாங்கள் நிச்சயம் மீட்டெடுப்போம் என தினகரன் தெரிவித்தார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications