சேலம் சங்ககிரியில் புளிய மரத்தில் இருந்து நீரூற்று போல் பீறிட்ட தண்ணீர்.. கடைசியில் நடந்தது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் புளிய மரத்தில் இருந்து நீரூற்று போல் பீறிட்டு தண்ணீர் வெளியேறிய நிலையில், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி - திருச்செங்கோடு பிரதான சாலையில் உள்ள ரெயின்போ காலனி பேருந்து நிறுத்தம் அருகே, புளிய மரத்திலிருந்து நீரூற்று போல் தண்ணீர் பீறிட்டு வெளியேறிய சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Water Gushes Out of Tamarind Tree in Salem s Sankari Leaves Public Amazed

நேற்று இரவு 9 மணியளவில், அங்குள்ள புளிய மரத்தின் மேல்பகுதியிலிருந்து திடீரென தண்ணீர் நீரூற்று போல் வெளியேறத் தொடங்கியது. இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர், பூமியிலிருந்து நீரூற்று உருவாகி மரத்தின் வழியாக தண்ணீர் வெளியேறுவதாக நினைத்து ஆச்சரியத்துடன் திரண்டனர்.

மேலும், இந்த வினோத நிகழ்வை பலரும் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சுமார் 45 நிமிடங்களாக நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் வெளியேறியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து விசாரித்தபோதுதான், புளிய மரத்தின் அடிப்பகுதி வழியாகச் செல்லும் சங்ககிரியிலிருந்து ஆர்.எஸ். பகுதிக்குச் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக வெளியேறிய தண்ணீர் மரத்தின் மேல்பகுதி வழியாகப் பீறிட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குழாயில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மரத்திலிருந்து வெளியேறிய தண்ணீரும் படிப்படியாகக் குறைந்து நின்றது. காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் புளிய மரத்திலிருந்து நீரூற்று போல் தண்ணீர் வெளியேறிய வினோத சம்பவம், சங்ககிரி பகுதியில் பொது மக்களிடையே வியப்பில் ஆழ்த்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+