அதிமுகவை விஜய் சீண்டாதது ஏன்? சிரித்தபடி சீக்ரெட் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! உற்று பார்க்கும் திமுக
சேலம்: நடிகர் விஜய் தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் கூறியுள்ளார். ஆனால் அதிமுகவை அவர் விமர்சனம் செய்யவில்லை. ஊழலுக்கு எதிரான கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய் கூறியுள்ள நிலையில் அதிமுகவை அவர் விமர்சிக்காதது ஏன்? ஏனென்றால் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதுபற்றி பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27 ம்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடந்தது. இதில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை மற்றும் கொடி விளக்கத்தை வெளியிட்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆளும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜக பிளவுவாத அரசியல் செய்வதாகவும், தனது கொள்கை எதிரி பாஜக எனவும் கூறினார். அதேபால் திமுகவை ஊழல் கபடதாரிகள் என்றும், அரசியல் எதிரி என்றும் கூறினார்.
இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை. ஊழலுக்கு எதிரான கொள்கை உள்ளதாகவும், ஊழல் இல்லா ஆட்சியை நடத்துவதாகவும் நடிகர் விஜய் பேசிய நிலையில் அதிமுக ஊழல் செய்யவில்லையா? ஏன் விஜய் அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் விஜய் அதிமுகவுடன் கூட்டணிக்கு திட்டமிட்டுள்ளார். இதனால் தான் அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை என்று கூறிவருகின்றனர். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியை எதிர்த்து தான் விஜய் அரசியலுக்கு வருகிறார். இதனால் தான் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆளும் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார் என்று கூறிவருகின்றனர்.
இதற்கிடையே தான் சேலத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை ஏன்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சிரித்தபடி, ‛‛அதிமுகவை பற்றி ஒருவர் பேசாமல் இருக்கிறார் என்றால் உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது. எல்லாரும் துடிக்கிறாங்க.. ஏன் அதிமுகவை பேசவில்லை.. ஏன் அதிமுகவை பேசவில்லை என்று.
நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன். அதிமுக கட்சி என்பது மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. மக்களுக்கு உழைக்கிற கட்சி. அதிமுக அரசு இருந்தபோது தான் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கட்சியை அப்படிப்பட்ட அரசை அவர் எப்படி விமர்சனம் செய்வார்? அதில் என்ன குற்றம் கண்டுபிடிப்பார்?.
ஒவ்வொரு கட்சி தலைவர்களுக்கு ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். அந்த அடிப்படையில் தான் பேசுவார்கள். அதனால் இந்த கட்சியை பேசவில்லை. அந்த கட்சியை பேசவில்லை என்று மற்றவர்கள் ஆதங்கப்பட வேண்டிய அவசியமே இல்லை'' என்றார். இருப்பினும் கூட்டணி தொடர்பாக அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சியினருக்கு ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இன்றைய பேட்டியிலும் அதிமுக மக்களுக்கான கட்சியாக இருப்பதால் நடிகர் விஜய் தங்களை விமர்சனம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
-
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில்










Click it and Unblock the Notifications