ஆபத்து! பாதியாக குறைந்த தேனீக்களின் ஆயுட்காலம்.. ஆய்வாளர்கள் வார்னிங்.. நடந்தது என்ன? காரணம்!
நியூயார்க்: அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் தேனீக்களின் ஆயுட்காலம் பாதியாக குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது 1970களில் வாழ்ந்த தேனீக்களை விட தற்போது உள்ள தேனீக்கள் விரைவாக உயிரிழந்துவிடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு தேனீக்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஆய்வின் முடிவுகள் சூழலியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுட்காலம்
அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழக பூச்சியியல் வல்லுநர்கள் நடத்திய புதிய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதாவது ஆய்வக சூழலில் வைக்கப்பட்டு வளர்க்கப்படும் தேனிகளின் ஆயுட்காலம் 50% குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் தேனுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் தேனீக்கள் செயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு செயற்கையாக வளர்க்கப்படும் தேனிகள் விரைவாக உயிரிழந்துவிடுவதை தேனி வளர்ப்பாளர்கள் கவனித்துள்ளனர். இது குறித்து தொடர்ச்சியான புகார்கள் வந்த நிலையில் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

காரணம்
தேன் தேவைக்காக வளர்க்கப்படும் தேனீக்களின் மரபணுவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் அழுத்தமா? ரசாயன உரங்கள், நோய்கள், ஒட்டுண்ணிகள் என தேனீக்கள் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். செயற்கையாக தேன் உற்பத்தியில் ஈடுபடும் தேனிகளின் வாழ்க்கை சுழற்சி விரைவாக நடந்து முடிந்துவிடுகிறது. இதனால் இந்த வகை தேனீக்கள் விரைவில் திருப்தியடைந்து விடுவதாகவும், இது தேனீக்களின் மரபணுவில் தொடர்ந்து கடத்தப்படுவதால் இப்படி குறைந்த ஆயுட்காலத்தில் தேனீக்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

வேற லெவல் தேனீக்கள்
தேனீக்கள் பருவமடைவதற்கு முன்னரே அதனை தனிமைப்படுத்தி வைத்திருப்பது கூட இம்மாதிரியான உயிரிழப்புக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இயற்கையில் பூச்சிகளுக்கு என்று எவ்வித உணர்ச்சியும் கிடையாது என்று நாம் நினைத்து வரும் நிலையில், தேனீக்கள் விளையாடும் திறனை கொண்டிருக்கின்றன என்று பூச்சியியல் வல்லுநர்கள் சமீபத்தில்தான் கண்டுபிடித்தனர். உயிரற்ற பொருட்களுடன் விளையாடும் மனிதர்களை போலவே தேனீக்களும் உயிரற்ற பொருட்களுடன் விளையாடுவதன் மூலம் அப்பொருளை தொடர்பு கொள்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நம்பிக்கை
இந்த ஆய்வின் மூலம் தேனீக்கள் விளையாடும் திறனை பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்லாமல், நாம் நினைப்பதை விடவும் பூச்சிகளின் மனம் அதிநவீனமானது என்பதை நம்மாள் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் இப்படி இருக்கையில் திடீரென தேனீக்களின் ஆயுட் காலம் பாதியாக குறைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எப்படியாயினும், இதற்கான முழுமையான காரணம் விரைவில் கண்டறியப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications