சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாய்க்கு வெறி பிடிச்சுருச்சு! வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட எச்.ராஜா! 5 வருஷம் ஜெயிலுக்கு வாய்ப்பு?

Google Oneindia Tamil News

சிவகங்கை : தங்கள் வீட்டில் வளர்த்த அல்சேஷன் நாய்க்கு வெறி பிடித்ததால் அடித்துக் கொன்று விட்டதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ட்விட்டர் பதிவிட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக அவர் மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு ஏழு நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா எப்போதுமே அதிரடி அரசியல், ஆவேச பேச்சு என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ட்ரெண்டிங்கில் இருப்பவர். குறிப்பாக ட்விட்டரில் அவர் எப்போதும் ஆக்டிவ் தான்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரை பார்த்து "யூ ஆர் ஆன்ட்டி இந்தியன்" என பேசிய அவரது பேச்சு தற்போது வரை சமூக வலைதளங்களில் பரவி வருவது அனைவருக்கும் தெரிந்தது தான்.

கேரளாவில் சிக்கிய ராக்கெட் ராஜா! தண்ணி காட்டிய ரவுடியை ’ஸ்கெட்ச்’ போட்டு மடக்கிய நெல்லை போலீஸ்! கேரளாவில் சிக்கிய ராக்கெட் ராஜா! தண்ணி காட்டிய ரவுடியை ’ஸ்கெட்ச்’ போட்டு மடக்கிய நெல்லை போலீஸ்!

பாஜக எச்.ராஜா

பாஜக எச்.ராஜா

இது மட்டுமல்லாமல் எப்போதும் ஒற்றை அல்லது இரட்டை வார்த்தைகளில் ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கி கொள்வதும் அவருக்கு வாழ்க்கை தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சிலை குறித்து பதிவிட்ட வழக்கில் எச் ராஜாவுக்கு பெரிய அளவில் கண்டனம் இழந்த நிலையில் தான் போடவில்லை தனது அட்மின் தான் ட்விட்டர் பதிவை போட்டார் என சொல்லி தான் தப்பித்துக் கொண்டார். செய்தியாளர் சந்திப்பு என்றாலும் சரி ட்விட்டர் என்றாலும் சரி வாயை கொடுத்து ஏதாவது வாங்கி கட்டிக் கொள்வதும் அவரது வழக்கம் தான்.

சிக்கலில் சிக்கினார்

சிக்கலில் சிக்கினார்

கடந்த வாரம் கூட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை ஒருமையில் விமர்சித்து 'தம்பிகளிடம் சிக்கினார். ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, 'நீ காணாமல் போய்விடுவாய்' என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்திருந்த நிலையில், அவர் மனநல மருத்துவனைக்குச் செல்வது நல்லது என சீமான் மீண்டும் பதிலடி கொடுத்தார்.

அல்சேஷன் நாய்

அல்சேஷன் நாய்


இந்நிலையில் தான் வெளியிட்ட பதிவாலேயே எச்.ராஜாவுக்கு சிக்கல் வந்திருக்கிறது. எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கண்டிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். 'நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது." என பதிவிட்டிருந்தார். யாரை நினைத்து அவர் பதிவிட்டாரோ தெரியாது. ஆனால் இப்போது அதனாலேயே வசமாக சிக்கியிருக்கிறார்.

விசாரணை நடத்த உத்தரவு

விசாரணை நடத்த உத்தரவு

பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் இந்த பதிவு குறித்து ஸ்வபனா சுந்தர் என்ற விலங்குகள் நல ஆர்வலர் விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் இது தொடர்பாக விசாரணை நடத்தி 7 நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. மிருகவதை தடைச் சட்டத்தின்படி தெரு நாயாக இருந்தாலும் எந்த விலங்கையும் துன்புறுத்துவது குற்றமாகும். மேலும் விலங்குகளை கொலை செய்தல், விஷம் கொடுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Senior BJP leader H. Raja had posted on Twitter that he had killed his Alsatian dog. In this case, it has been reported that a complaint has been filed against him in the Animal Welfare Board and he has been ordered to submit a report within seven days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X