எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு! வாரிசே இல்லாதவர்களின் புலம்பல்! பெரியகருப்பனுக்கு வந்ததே கோபம்!
சிவகங்கை : உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு எழும் விமர்சனங்கள் அனைத்துமே அரசியலில் வாரிசு இல்லாதவர்களின் புலம்பல்கள் எனவும், அமைச்சரவையில் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சராக பதவி ஏற்று கொண்ட சிறிது நேரத்திலேயே உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டு இருந்தது. உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்பட்டது.

அமைச்சரவை மாற்றம்
தொடர்ந்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு கூட்டுறவு துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஐ.பெரியசாமியின் வசம் இருந்த புள்ளியில் துறை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டதை ஒருபுறம் திமுகவினர் கொண்டாடி வந்தாலும் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தீவிரமாக விமர்சித்து வருகின்றன. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்பி உதயகுமார், சசிகலா என இரண்டு நாட்களாக அடுத்தடுத்து விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. வாரிசு என்பதால் சீனியர்கள் புறக்கணிக்கப்பட்டு உதயநிதிக்கு மகுடம் சூட்டப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் வாரிசு அரசியல் திமுகவில் இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்திருந்தார். இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றினையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

பெரிய கருப்பண்
இந்நிலையில், அமைச்சரவையில் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அமைச்சரவை என்பது ஒரு கூட்டு பொறுப்பு. முதலமைச்சருக்கு அதை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துறையாக இருந்தாலும், இப்பொழுது ஒதுக்கப்பட்ட துறையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்காகவும் இந்த துறையை முதலமைச்சர் தந்துள்ளார் என்பதை நன்றி பொறுப்போடு ஏற்று கொள்கிறேன்.

புலம்பல்கள்
அரசியலில் திறமையும் தகுதியும் உள்ள வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. வெறும் வாரிசு என்று சொல்லிக் கொண்டு வீட்டில் இருந்தால் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது. உதயநிதி அமைச்சரானதற்கு எழும் விமர்சனங்கள், அரசியலில் வாரிசு இல்லாதவர்களின் புலம்பல்கள். அமைச்சரவையில் பதவியேற்றுள்ள உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. அரசியல் ஜாம்பவான்களான கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத சூழ்நிலையில், எந்தவித சேதாரமும் இல்லாமல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக இயக்கமும், தமிழக அரசும் சிறப்பாக செயல்படுகிறது" என்றார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications