Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருமும்போது ரத்தம்.. இண்டர்நெட்டில் மருத்துவம் சரியா? தவறா? டாக்டர் பரூக் அப்துல்லா

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: இண்டர்நெட்டில் மருத்துவம் சரியா ? தவறா ? மனநோயாளிகளை உருவாக்கும் இண்டர்நெட் மருத்துவம் என டாக்டர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறிருப்பதாவது: இண்டர்நெட் டாக்டர் எப்படி பிரச்சனையை உருவாக்குகிறார் என்று பார்ப்போமா? ஒருவருக்கு ஒரு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. அவருக்கு தொண்டை வலி மற்றும் சளியோடு கொஞ்சம் ரத்தம் வெளியேறுகிறது. இது தான் பிரச்சனை.

அவர் உடனே செய்ய வேண்டியது என்ன? தான் காண்பிக்கும் குடும்ப மருத்துவரிடம் சென்று காண்பித்து அந்த நோயை பற்றி அவர் கூற அறிந்து கொண்டு அந்த நோயில் இருந்து விடுதலை பெற முயற்சிக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? "I am suffering from throat pain with blood while coughing. what is the diagnosis ?" ( எனக்கு தொண்டை வலி இருக்கிறது. இருமும் போது சளியுடன் ரத்தம் வருகிறது) என்று இண்டர்நெட்டில்
தட்டச்சுகிறார்.

தட்டுங்கள் திறக்கப்படும்

தட்டுங்கள் திறக்கப்படும்

அதுவும் கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் எனும் விவிலியத்தின் வசனங்கள் போல.. நூற்றுக்கணக்கான சம வார்த்தைகள் கொண்ட தகவல்களை கொட்டும். அதில் இருந்து முதல் செய்தியை அன்னார் திறந்து பார்ப்பார். அதில் " blood during cough may be the symptom of throat cancer . it can be tuberculosis also. kindly consult a pulmonary physician " என்று பதில் வருகிறது ( இருமும் போது சளியுடன் ரத்தம் வந்தால் அது காச நோயாகவோ அல்லது தொண்டையில் வரும் புற்று நோயாகவோ இருக்கலாம். எதற்கும் மருத்துவரிடம் சீக்கிரம் காட்டுங்கள்")

புலம்புதல்

புலம்புதல்

இதை படித்து நம்மாளுக்கு உடனே அடி வயிறு கலக்கி பேதியாகும். ஆகா.. நமக்கு கேன்சர் வந்துருச்சாம்லப்பா?
வசூல் ராஜா படத்தில் வரும் ஜாகிர் போல " இன்னும் வாழ்க்கைல எதுவுமே பாக்கலையே இறைவா.. அதுக்குள்ள எனக்கு கேன்சரா? இறைவா ஏன் இப்டி சோதிக்குற?" என்று உள்ளுக்குள்ளேயே அழுது புலம்புவார்.

பரிசோதனை கூடம்

பரிசோதனை கூடம்

அடுத்து அதே இண்டர்நெட் டாக்டரிடம் "what are all the investigation to be done for throat cancer ?" ( தொண்டை புற்று நோய்க்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள் யாவை?)" என்று அடிப்பார் அதுவும் நிறைய ரத்தப்பரிசோதனைகள் ஒரு சிடி ஸ்கேன் என்று தட்டிவிடும். அருகில் இருக்கும் பெரிய ரத்த பரிசோதனை கூடத்திற்கு கால் செய்து அந்த பரிசோதனைகளை உடனே செய்வார்.

 30 டெஸ்ட்

30 டெஸ்ட்

அந்த பரிசோதனைகளில் 30 டெஸ்ட் இருந்தால் ஒரு 5 டெஸ்ட் நார்மலை விட கூடவோ குறைவாகவோ இருக்கும். உதாரணம் அதில் ஹீமோகுளோபின் 12.5 g/dl என்று வரும். நார்மலாக 14-16 இருக்க வேண்டும். உடனே நம்மவர் "my haemoglobin is 12.5 . what is the disease I am suffering from ?" ( எனக்கு ஹீமோகுளோபின் 12.5 இருக்கிறது. எனக்கு என்ன நோய் என்று கூற இயலுமா?)" என்று இண்டர்நெட்டில் கேட்பார்.

 இன்டர்நெட் கிளி

இன்டர்நெட் கிளி

உடனே இண்டர்நெட் கிளியும் பல சீட்டுகளை எடுத்துப்போடும். அதில் நல்ல சீட்டை நம்மவர் எடுப்பார். அதில் "low haemoglobin in a male patient may be due to presence of carcinoma" ( ஆண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது புற்றுநோயின் அரிய அறிகுறியாக இருக்கலாம்)
என்று கடைசி பத்தியாக இருக்கும்.

உணவு சார்ந்த ஊட்டச்சத்து

உணவு சார்ந்த ஊட்டச்சத்து

முதலில் இருக்கும் " உணவு சார்ந்த ஊட்டச்சத்து குறைபாடு.. பைல்ஸ் வியாதி.. நாள்பட்ட இன்பெக்சன்.. வயிற்றில் குடல்புழு இருப்பது " போன்ற காரணங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு கடைசி வரியாக இருக்கும் அந்த கேன்சரை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார். இப்போது தனக்கு கேன்சர் வந்துவிட்டதாக 90 சதவிகிதம் உறுதி செய்து கொண்ட நம்மவர் அடுத்து சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும்.

 சிடி ஸ்கேன்

சிடி ஸ்கேன்

சிடி ஸ்கேன் எடுக்க ஒரு அப்பாவி மருத்துவரின் பரிந்துரை வேண்டுமல்லவா? அன்று மாலையே மருத்துவருக்கு அப்பாய்ண்ட்மெண்ட ஃபிக்ஸ் செய்வார். மருத்துவரிடம் சென்று அங்கு நடக்கும் சம்பாசனையைக் காண்போம். நம்மவர் நேராக மருத்துவரின் அறை உள்ளே நுழைந்ததும் மருத்துவர் கேட்கிறார். " சார்.. உங்களுக்கு என்ன செய்கிறது?" நம்மவர் எதுவும் பேசாமல் தன்னகத்தே வைத்திருக்கும் கத்தையான அந்த லேப் ரிபோர்ட்டை மருத்துவரிடம் காட்டி " இதைப்பாருங்க சார்"

சாப்பாடு

சாப்பாடு

மருத்துவரும் முழுவதும் பார்த்து விட்டு "எல்லாம் ஓகே தான் . கொஞ்சம் Hb கூட்டணும். சாப்பாட்டுல சரி பண்ணலாம் . கொஞ்ச நாள் சப்ளிமெண்ட் எடுத்தா போதும் . மத்தபடி பிரச்சினையில்லை. உங்களுக்கு இருக்குற சிம்ப்டம்ஸ் சொல்லுங்க சார்" நம்மவர் " சார்... நல்லா பாருங்க சார்.. எதுவும் பிரச்சனையில்லையா?" மருத்துவர் " ரத்த டெஸ்ட்ல ஒரு பிரச்சனையும் இல்லை சார். உங்களுக்கு என்ன செய்யுதுனு சொல்லுங்க ப்ளீஸ்"

தொண்டை வலி

தொண்டை வலி

"ஒரு மாசமா தொண்டை வலி சார். கடந்த ஒரு வாரமா இருமுனா சளியோட ரத்தம் ஒட்டிக்கிட்டு வருது" தொண்டையில் டார்ச் அடித்து பார்த்து விட்டு " நல்லா இன்ஃபெக்சன் ஆகிருக்கு சார். நான் ஒரு கோர்ஸ் ஆண்ட்டிபயாடிக் மாத்திரை தரேன் எடுங்க. கூடவே பீடாடைன் கார்க்லிங் பண்ணுங்க. சரியாகும். திரும்ப வாங்க பாக்கலாம்"

ஜஸ்ட் கிருமித் தொற்று

ஜஸ்ட் கிருமித் தொற்று

"சார்ர்ர்ர்ர்... Naso pharyngeal carcinoma னு படிச்சேனே சார்.." "எந்த மெடிக்கல் காலேஜ்ல சார் நீங்க படிச்சீங்க? எந்த பேட்ச் ?" "சார்.. ப்ரவுஸ் பண்ணும் போது எனக்கு கேன்சர் இருக்குற மாதிரி சொல்லுச்சு சார். நீங்க ஒரு பிரச்சனையும் இல்லனு சொல்றீங்க. ஒரே கன்ஃப்யூசனா இருக்கு சார்." " ஹா ஹா.. naso pharyngeal carcinoma லாம் இல்ல சார். அது இந்த வயசுல வராது. அது போக உங்களுக்கு அதுக்கான எந்த ரிஸ்க் ஃபேக்டரும் இல்ல. உங்கள செக் பண்ணிப்பாத்ததுல இது ஜஸ்ட் கிருமித்தொற்று தான். சரியாகிடும். பயப்படாம போய்ட்டு..

சிடி ஸ்கேன்

சிடி ஸ்கேன்

" சார்.. சாரி.. இப்டி கேக்குறதுக்கு..எதுக்கும் ஒரு CT scan எழுதித்தர்றீங்களா? பாத்துடுவோம் சார் .. நீங்க எழுதிக் கொடுத்தா எனக்கு இன்சுரண்ஸ்ல கவராகிடும் . ப்ளீஸ் சார்" " சார்.. விளையாடாதீங்க.. உங்களுக்கு இன்சுரண்ஸ்ல ஃப்ரீயா எடுக்குறாங்கங்குறதுக்காக சிடி ஸ்கேன் தேவையில்லாம எடுக்க முடியாது. தேவையில்லாத ரேடியேசன் சார்.. அத தேவையில்லாம எப்டி எழுதித் தர்றது"

மூக்கு தண்டு வடம்

மூக்கு தண்டு வடம்

" சார்.. இஃப் யூ டோண்ட் மைண்ட்.. எனக்கு நெட்ல படிச்சதுல இருந்தே ஒரே ஸ்ட்ரஸ் டிப்ரசனா இருக்கு.. தயவு செய்து அத எழுதிக் கொடுத்தா சிடி ஸ்கேன் பாத்துட்டு நான் அந்த ஸ்ட்ரெஸ்ல இருந்து வெளிய வந்துடுவேன்.. ப்ளீஸ் சார்.. ப்ளீஸ்" " என்ன சார் உங்க கூட இப்டி .. என்று சலித்துக் கொண்டு சிடி ஸ்கேன் எழுதிக்கொடுத்தார் டாக்டர் இப்போது ரிப்போர்ட் வந்தது. அதில் mild deviated nasal septum
maxillary sinusitis (மூக்கு தண்டுவடம் லேசாக வளைந்திருப்பது / சைனஸ் பிரச்சனை) என்று இருந்தது உடனே நம்மவர் "can deviated nasal septum can be the cause of throat cancer?" ( மூக்கு தண்டுவடம் வளைந்திருப்பது தொண்டை புற்று நோயை உண்டாக்குமா?) என்று டைப் செய்து எண்ட்டர் பட்டனை தட்டினார்.

இன்டர்நெட்

இன்டர்நெட்

அதில் ஒரு செய்தியை தட்டினால் "there may be a rare chance of people with deviated nasal septum to develop sino nasal polyposis which may very rarely change to carcinoma" ( மூக்கு தண்டுவடம் வளைந்திருப்பவர்களுக்கு மிக அரிதாக தொண்டை புற்று நோய் வந்திருக்கிறது) என்று இருந்தது... இப்படியாக அடுத்த நாள் அந்த ரிப்போர்ட்டை தூக்கிக் கொண்டு அதே மருத்துவரிடம் ஓடுகிறார்.. இப்படியாக இண்டர்நெட்டுக்கும் மருத்துவருக்கும் ஓடி ஓடி ஒருநாள் மனநல மருத்துவரிடம் செல்லும் நிலைக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் நோய்கள் அச்சத்துடனே வாழ்கிறார் நம்மவர். இண்டர்நெட்டில் விடை கேட்பது மனநோய்க்கு வழிவகுக்கும். இதுபோன்ற மனநோயில் தாங்கள் சிக்கியிருந்தால் இப்போதே வெளிவந்து விடுங்கள்.

குடும்ப மருத்துவர்

குடும்ப மருத்துவர்

உங்களுக்கென ஒரு மருத்துவரை குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்ளுங்கள். ஆரம்ப கட்ட சிகிச்சைகளை அவர் வழங்குவார். பிறகு அவர் தேவைப்பட்டால் அடிப்படை பரிசோதனைகளை செய்வார். அதிலும் தேவைப்படும் போது சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார். இதுவே அந்த மனநோயில் இருந்து வெளிவர உதவும் சிகிச்சையாகும். ஆயிரம் புத்தகம் பேசாத அறிவை ஒரு அனுபவம் பேசி விடும்.

நூறு கூகுள்

நூறு கூகுள்

நூறு கூகுள் பத்திகள் தராத உண்மையை மருத்துவனின் ஒரு சொல் கூறி விடும். உங்களுக்கான மருத்துவரை எத்தனை அளவு கோல் வைத்து வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள் ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுத்த பிறகு அந்த மருத்துவரை நம்புங்கள். உங்களது மருத்துவம் சம்பந்தமான உடல்நலம் தொடர்பான விசயங்களில் அவரது ஆலோசனை மற்றும் கருத்தைக் கேட்டுப் பெறுங்கள் அதுவே சிறந்தது. அறிவுப்பூர்வமானது மன அமைதி தரக்கூடியது. சைபர்காண்ட்ரியாவுக்கு ஆளாகிவிட வேண்டாம் அன்பர்களே . இவ்வாறு தனது பதிவில் டாக்டர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+