‛ஏமாற்றம்’.. ரூ.1000 உரிமைத்தொகையை அனைவருக்கும் கொடுங்க! கார்த்தி சிதம்பரம் பளீச்! திரும்பும் திமுக
சிவகங்கை: தமிழக அரசின் ரூ.1000 உரிமைத்தொகையை அனைவருக்கும் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றங்கள், மனவருத்தங்கள் தான் ஏற்படும் என காங்கிரஸ் எம்பியான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ் உள்ள நிலையில் அவரது இந்த கருத்து விவாதத்தை கிளப்பும் வகையில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபைக்கு 2021ல் தேர்தல் நடந்தது. அப்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசிடம் போதிய நிதி இல்லை என்பதால் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றி தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள குடும்ப தலைவிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு மட்டும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. இதற்காக பல்வேறு கண்டிஷன்களை தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்ட பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படட்டது.
இதையடுத்து உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் ரூ.1000 வழங்குவது என்பது மறைந்த முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ல் அமலுக்கு வர உள்ளது. அன்றைய தினத்தில் இருந்து தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் உள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். இவர்கள் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பம் செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் எம்பியான கார்த்தி சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ரூ.1,000 உரிமைத்தொகை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பதிலால் திமுகவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியதாவது:
எந்தவொரு திட்டத்தை அமல்படுத்தும்போதும் இவர்களுக்கு கொடுக்கலாம். இவர்களுக்கு கொடுக்க வேண்டாம் எனும் வகையில் விதிமுறைகள், வரைவு போடப்பட்டால் கண்டிப்பாக ஏமாற்றங்கள். மனவருத்தங்கள் வரும். என்னை பொறுத்தவரை யூனிவர்செல்லாக அனைவருக்கும் கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

அதிகாரிகளிடம் இந்த பட்டியலில் ஒருவரை சேர்க்கலாம். சேர்க்க வேண்டாம் என்ற அதிகாரம் கொடுத்தால் குழப்பம் தான் வரும். மற்ற திட்டங்களை நான் பார்த்துள்ளேன். குழப்பம் தான் வருகிறது. என்னை பொறுத்தவரை எந்த திட்டமாக இருந்தாலும் விதிவிலக்கு என்பது இருக்கக்கூடாது. நான் தமிழ்நாட்டு அரசுக்கு மட்டும் இதனை சொல்வதாக இல்லை. பொருளாதார ரீதியாக நான் கூறுகிறேன்.
ஏனென்றால் விதிவிலக்கு இருக்க கூடாது. யூனிவர்செல்லாக அனைவருக்கும் கொடுத்து விட வேண்டும். வசதி வாய்ந்தவர்களுக்கும், அந்த தகுதிக்குள் அடங்காதவர்களுக்கு இந்த பலன் சேரும் வாய்ப்பு உண்டு. இருந்தாலும் பரவாயில்லை என நினைப்பவன் நான். யாரையும் ஒதுக்கிவிட்டு இந்த திட்டத்தை அமல்படுத்த கூடாது. அதற்கான நிதியை திரட்டுவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பது தான் எனது கருத்து'' என்றார்.
தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. முதல்வர் ஸ்டாலினும் காங்கிரஸ் மேலிடத்துடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். இத்தகைய சூழலில் தான் கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து என்பது திமுக திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதோடு விவாதத்தை கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications