தீபாவளி பலகாரம் சுடும்போது ஏற்பட்ட தீ விபத்து.. சிவகங்கை அருகே வீடு முழுவதும் எரிந்து நாசம்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரையூர் அருகே இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதியில் தீபாவளி பலகாரங்கள் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதமானது.

இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் முதற்கட்டமாக 112 பேருக்கு தொகுப்பு வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக அவர்கள் குடியிருந்த வீடுகள் முழுவதும் இடிக்கப்பட்டு அதில் 100 நபர்களுக்கு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

House Gutted in Fire While Preparing Diwali Snacks in Sivaganga

இந்நிலையில் 38 நபர்களுக்கு பின்னர் வீடு கட்டி தரப்படுவதாக கூறிவந்த நிலையில் அனைத்து வீடுகளையும் இடித்து விட்டதால் அங்கு வசித்த மக்கள் அருகில் தகர கொட்டகைகள், ஓட்டுக் கொட்டைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்காலிகமாக தகரத்தால் வீடு அமைத்து அங்கு வாழ்ந்து வரும் துர்வாசன் - சசிகலா குடுபத்தினர் தீபாவளிக்காக பலகாரம் சுட்டு கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் இருந்து நெருப்பு பிடித்துள்ளது. அது மளமளவென பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது.

அப்போது பலகாரம் சுட்டுக் கொண்டிருந்த சசிகலாவின் குழந்தைகள் நெருப்பு பிடித்து எரிவதை பார்த்து அலறியடித்து வெளியே வந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு அழைத்துள்ளனர் அதற்குள் வீடு முழுவதுமாக எரிய ஆரம்பித்து விட்டது. இளைஞர்கள் சிலர் சிலிண்டரை வெளியில் தூக்கி வந்து பெரும் விபத்தை தடுத்து நிறுத்தினர்.

குடங்கள், வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து நெருப்பை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது. பின்பு தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிறு தூறலாக மழை பெய்து பொதுமக்கள் விரைந்து தீயை அணைப்பதற்கு உதவியது. இருப்பினும் வீட்டில் இருந்த துணிகள், நகைகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து முழுவதும் சேதமடைந்தன. அதேபோன்று அருகில் இருந்த ஜெகநாதன், சூர்யகலா ஆகியோரின் வீட்டு பொருட்களும் எரிந்து சேதுமடைந்ததால் இந்த இரு குடும்பத்தினர் மிகவும் துயரத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+