பெண் கொடுக்க மறுத்ததால் பெண் வீட்டின் முன்பு இளைஞர் தீக்குளித்து தற்கொலை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண் கொடுக்க மறுத்ததால் பெண் வீட்டின் முன்பு இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏறபடுத்தி உள்ளது.
காதலித்த பெண் வீட்டிற்கு சென்று பெண் கேட்ட போது, அவர்கள் பெண் தர மறுத்து அறிவுரை கூறி அனுப்பியதை ஏற்காத விஜய் என்ற இளைஞர், அவர்கள் வீட்டின் முன் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதுடன், சொன்னது போலவே தற்கொலையும் செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள தருமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(வயது 25). இவர் காரைக்குடி அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ படித்துள்ளார். அப்போது தன்னுடன் படித்த காரைக்குடி அருகே உள்ள மீனா வயல் கிராமத்தைச் சேர்ந்த மாணவியை விஜய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பேசுவதை நிறுத்தினார்
இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது ஆனால் அந்த மாணவி விஜயோடு திடீரென்று பேசுவதை நிறுத்தி உள்ளார் ஆனால் விஜய் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அந்த பெண்ணிற்கு வேண்டியவர்களிடம் சென்று தான் காதலித்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார் '

அறிவுரை கூறியுள்ளனர்
ஆனால் பெண் வீட்டில் பெண் தர இயலாது என விஜய்க்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர் அப்போது விஜய் பெண் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பெண் வீட்டாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் தரப்பில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். '

பெண் வீட்டில் சோகம்
இந்நிலையில் விஜய் அந்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார் அங்கு அவரது வீட்டின் முன் நின்று தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார் தீ மளமளவென அவர்மீது பற்றி எரிந்து இதில் அவர் அலறி உள்ளார்.

உயிரிழப்பு
அவரது அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அணைத்தனர் ஆனால் சம்பவ இடத்திலேயே விஜய் உயிரிழந்துள்ளார் இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவம் இடம் வந்த போலீசார் விஜயின் உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துமேல் விசாரணை செய்து வருகின்றனர். தான் காதலித்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி இளைஞர் பெண்ணின் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,


Click it and Unblock the Notifications
