ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி... உள்ளாட்சி தேர்தலில் இது எதிரொலிக்கும் - ப.சிதம்பரம்
எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய ஆட்சியைத் தந்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை: முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் இது எதிரொலிக்கும்.
மேலும் அழகப்பா பல்கலை கழகத்திற்கு உடனடியாக புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என மோடி அரசு கூறியது உண்மை அல்ல. தவறான தகவலை கூறியுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற உடன் 5 திட்டங்களை அறிவித்தார். பதவியேற்ற நாளிலேயே 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

தமிழகத்தின் நிதி நிலைமையை சமாளிக்க சிறிது காலமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார். தமிழக அரசின் நிதி நிலைமை சீராக இல்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். நிதிநிலைமையை சீரமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். நிதி நிலைமை சீராகும் போது தான் இன்னும் சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
திமுக ஆட்சி பதவியேற்று 4 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியையும் மு.க ஸ்டாலினையும் வாழ்த்தியுள்ள ப.சிதம்பரம் உள்ளாட்சி தேர்தல் கூட்டணியை உறுதியை செய்து விட்டு கூடவே வெற்றி வாய்ப்பு உறுதி என்றும் கூறியுள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ப. சிதம்பரத்தின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவாரா முதல்வர் மு.க ஸ்டாலின் பார்க்கலாம்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications