சச்சின் டெண்டுல்கர் வீட்டில் டும் டும் டும்.. மார்ச் மாதம் நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் அர்ஜூன்
மும்பை: சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபர் ரவி காய் பேத்தியுமான சானியா சந்தோக் திருமணம் மார்ச் மாதம் நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது திருமணம் நடக்க உள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வந்த அர்ஜூன் டெண்டுல்கர், தற்போது லக்னோ அணிக்கு டிரேட் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை மும்பை அணியில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இனியாவது அவருக்கு லக்னோ அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமணத்தை முடிக்கும் முடிவில் சச்சின் டெண்டுல்கர் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாகவே தனது அக்கா சாரா டெண்டுல்கரின் தோழியான சானிய சந்தோக் உடன் காதலில் இருந்து வந்தார். சானியா சந்தோக் பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தியாவார்.
இதையடுத்து இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதமே அர்ஜூன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் இணையின் நிச்சயதார்த்தம் நிறைவடைந்தது. மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் மார்ச் 5ஆம் தேதி அர்ஜூன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடருக்கு முன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணத்தை முடித்து, பின்னர் லக்னோ அணிக்காக விளையாட வருவார் என்று பார்க்கப்படுகிறது. மேலும் அக்கா சாரா டெண்டுல்கர் இருக்கும் போது தம்பி அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமணம் செய்வது குறித்து சிலர் விவாதித்து வருகின்றனர்.
சாரா டெண்டுல்கர் நீண்ட காலமாகவே சுப்மன் கில்லுடன் காதல் உறவில் இருக்கிறார். அண்மையில் நடந்த ஆஸ்திரேலியா டி20 தொடரின் போது கூட சாரா டெண்டுல்கர் மைதானத்திற்கு வந்திருந்தார். இதனால் விரைவில் சாரா டெண்டுல்கர் - சுப்மன் கில் திருமணமும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications