ஒரு வாரத்திற்கு ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு.. புதிய அட்டவணையை வெளியிடுவோம்.. குட் நியூஸ் சொன்ன பிசிசிஐ!
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு பின் சூழலை ஆய்வு செய்து, அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, பின்னர் ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றிரவு பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு திடீரென பதான்கோட் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், அணியின் உரிமையாளர்கள் உட்பட அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஐபிஎல் நிர்வாகிகளின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போதே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.
இதனால் ஆர்சிபி, மும்பை உள்ளிட்ட அணிகளின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் தொடர் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடர் உடனடியாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின், சூழலை ஆய்வு செய்யப்படும்.
அப்போது மத்திய அரசு, ஐபிஎல் பங்குதாரர்கள், உரிமையாளர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிந்து புதிய அட்டவணையை வெளியிடுவோம். பெரும்பாலான அணிகளின் உரிமையாளர்கள், வீரர்களின் உணர்வுகள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் ஆகியோரின் கருத்துகளை கூறினர். அனைத்து தரப்பினரும் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
முக்கியமான இந்த நேரத்தில் பிசிசிஐ தேசத்துடன் இணைந்து நிற்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பின் சூழல் கட்டுக்குள் வந்தால், தென்னிந்திய மைதானங்களில் போட்டியை நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் சாதகத்தை இழக்க நேரிடும் என்று பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications