5 மணிக்கு குஜராத்! 7 மணிக்கு மும்பை! அதெப்படி திமிங்கலம்? ஹர்திக் பாண்டியா அணி மாறியது எப்படி? ஏன்?
சென்னை: நேற்று 2024 ஐபிஎல் தொடருக்கான ரிட்டேஷன் நடந்தது. இதில் ஹர்திக் பாண்டிய அணி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை வைத்துதான் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றன.
மாலை 5 மணிக்கு நிலவரம்: நேற்று நிலவரத்தின்படி மாலை 5 மணிக்கு குஜராத் அணி மூலம் அவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் அவர் குஜராத் அணியில்தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7 மணிக்கு அவர் மும்பை அணிக்கு ஆல் கேஷ் டீலில் மாற்றப்பட்டார்.
இது எப்படி நடந்தது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டது. அதேபோல் அவரை ஏன் பின்னர் குஜராத் ரீ டெயின் செய்தது என்ற கேள்வியும் எழுந்தது. இது பற்றி பிசிசிஐ வட்டாரங்கள் வேறு தகவல்களை நம்மிடம் தெரிவித்துள்ளன.

அதன்படி...குஜராத் அணி உள்ளிட்ட எல்லா அணிகளுக்கும் முதலில் ரிட்டென்சன் தொடர்பான உத்தரவு சென்றுள்ளது. அதாவது ரிட்டென்சன் லிஸ்டை முதலில் வெளியிட வேண்டும். பின்னர் டிரேட் லிஸ்டை வெளியிட வேண்டும். அதாவது ஒரு வீரருக்கு பதிலாக இன்னொரு வீரரை எடுப்பது. இது பிரச்சனை இல்லை.
மூன்றாவதாக ரிட்டென்சன் முடிந்துதான் ஒரு வீரரை காசு பெற்றுக்கொண்டு கேஷ் டீலிங்கில் வேறு அணிக்கு மாற்ற முடியும் என்று பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஹர்திக் பாண்டியா விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம்.. அவரை ரிட்டென்சன் செய்யாமல் ரிலீஸ் செய்துவிட்டால் அவர் குஜராத் அணிக்கு சொந்தக்காரர் கிடையாது.
அவர் தானாக பொது சொத்து ஆகிவிடுவார் .. ஏலத்திற்கு வந்துவிடுவார். ரிட்டென்சன் செய்யாமல் இருந்தால்.., குஜராத் அணியால் அவரை பணத்திற்கு மும்பை அணிக்கு கொடுக்க முடியாது. அதனால் அவரை விற்க வேண்டும் என்றால் முதலில் குஜராத் அணி ரிட்டென்சன் செய்ய வேண்டும்.

ரிட்டென்சன் : இதன் காரணமாகவே முதலில் ஹர்திக் பாண்டியனை ரிட்டென்சன் செய்தது குஜராத் அணி. அதன்பின் அவரை தங்கள் உரிமையாக்கிய பின் மும்பை அணிக்கு ஆல் கேஷ் டீலிங்கில் விற்பனை செய்துள்ளனர். இதில் ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன்சி + கூடுதல் பணம் + விளம்பர ஆதரவு வந்தது. இந்த காரணத்தினால் மட்டுமே இந்த முடிவை ஹர்திக் எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார் என்று கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications