ஆங்கர் இல்லை.. வெட்ட வெளிச்சமான சிஎஸ்கே அணியின் வீக்னஸ்.. ரொம்ப கஷ்டம்.. உடனே சுதாரிக்கணும்
சென்னை: சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் ஆங்கர் வீரர் யாரும் இல்லாதது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. அதாவது ஓப்பனிங் சொதப்பினால்.. மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியை காக்க யாரும் இல்லாத சூழல் உள்ளது.
சிஎஸ்கே - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் லீக் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தற்போது மேட்ச் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் வேகம் எடுத்த சால்ட் விடாமல் அடித்தார். அதிலும் அஸ்வின் ஓவரில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சிக்ஸ், பவுண்டரி என்று 16 கைகள் எடுத்தார். 5வது ஓவரில் நூர் அஹமது வந்த பின்புதான் ஆட்டம் கொஞ்சம் சிஎஸ்கே பக்கம் வந்தது. அந்த ஓவரில் சால்டை நிற்க வைத்து பிரஷர் கொடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தோனி அசத்தலான ஸ்டம்பிங் விக்கெட் எடுத்தார்.
அடித்து வெளுத்த பெங்களூர்
அதன்பின் வந்த படிக்கல்லும் இரண்டு சிக்ஸ் என்று பயம் காட்டினாலும் அவரின் விக்கெட்டையும் சிஎஸ்கே எடுத்து ஆட்டத்தை மாற்றியது. ஆனால் அதன்பின்தான் அடுத்தடுத்து பல கேட்சுகளை சிஎஸ்கே மிஸ் செய்தது.

ஒரு பக்கம் படிதார் எளிதாக அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து கொஞ்சம் விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. முக்கியமாக முதல் இன்னிங்சில் கடைசி 3 ஓவர்களில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால் சிஎஸ்கே ஆட்டத்திற்குள் வந்தது. அதிலும் பதிரானாவின் 19வது ஓவரில் 1 ரன், 2 விக்கெட் எடுக்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் போன ஹாட் டிரிக் சிக்ஸ் காரணமாக மீண்டும் பெங்களூர் டிரைவர் சீட்டில் அமர்ந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே பேட்டிங் சொதப்பல்
இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி பேட்டிங்கில் சொதப்பி உள்ளது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் ஆங்கர் வீரர் யாரும் இல்லாதது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. அதாவது ஓப்பனிங் சொதப்பினால்.. மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியை காக்க யாரும் இல்லாத சூழல் உள்ளது.
8 ரன்களுக்கு- முதல் விக்கெட் (ராகுல் திரிபாதி அவுட், 1.2வது ஓவர்),
8 ரன்களுக்கு-2வது விக்கெட் (ருதுராஜ் கெய்க்வாட் அவுட், 1.6 வது ஓவர்),
26 ரன்களுக்கு -3வது விக்கெட் (தீபக் ஹூடா அவுட், 4.4வது ஓவர்),
52 ரன்களுக்கு-4வது விக்கெட் (சாம் குர்ரான் அவுட், 8.5வது ஓவர்),
75 ரன்களுக்கு-5வது விக்கெட் (ரச்சின் ரவீந்திரா அவுட், 12.1),
80 ரன்களுக்கு- 6வது விக்கெட், (ஷிவாம் துபே அவுட்) என்று வரிசையாக சிஎஸ்கே டாப் ஆர்டர் மட்டுமன்றி மிடில் ஆர்டரும் சொதப்பி உள்ளது.
பொதுவாக சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் சொதப்பினால் மிடில் ஆர்டர் சரியாக ஆடும். மிடில் ஆர்டர் சொதப்பினால் ஓப்பனிங் சரியாக ஆடும்.
ஆனால் இங்கே ஓப்பனிங் சொதப்பியதும்.. தீபக் ஹூடா, சாம் குர்ரான், ஷிவாம் துபே ஆகியோர் சொதப்பி விட்டனர். அம்பதி ராயுடு இருந்த போது இப்படி நடந்தது இல்லை. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் வீக்னஸ் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணி இப்போதே மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லையென்றால் அணிக்கு பெரிய அளவில் சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications