For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

16 அமைப்புகள், 424 வெளிநாடு வாழ் ஈழத் தமிழருக்கு தடை- இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: வெளிநாடுகளில் செயல்படும் 16 ஈழத் தமிழர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 பேரை தடை செய்வதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட உடனேயே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர் அமைப்புகளை தடை செய்யப் போவதாக இலங்கை தெரிவித்தது.

Sri Lanka Bans Global Tamil Political Groups

இதைத் தொடர்ந்து மார்ச் 21-ந் தேதியிட்ட கெஜட் அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடு கடந்த தமிழீழ அரசு உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிடப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த அமைப்புகளின் நிர்வாகிகள், அவற்றுடன் தொடர்புடைய 424 பேர் பெயர், வாழும் நாடு, தொலைபேசி இலக்கங்கள் ஆகியவற்றை வெளியிட்டு அனைவரும் தடை செய்யப்பட்டவர்களாகவும் இலங்கை அரசு அந்த கெஜட் அறிவிப்பில் கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தடை செய்யப்பட்ட 424 பேர் பற்றிய இலங்கை அரசின் கெஜட் விவரம்:

English summary
Sri Lanka has banned the self-declared government-in-exile of ethnic minority Tamils and more than a dozen other Tamil diaspora groups, accusing them of committing and supporting terrorism and freezing their assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X