For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச விசாரணையை தவிர அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார்: ராஜபக்சே

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொழும்பு: சர்வதேச விசாரணையை தவிர ஐ.நா.வின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே திடீரென அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேஜி கிஹாரா, அதிபர் மகிந்த ராஜபக்சேவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Sri Lanka to implement U.N. demands except international probe

அப்போது, ஐநாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் எந்த வகையில் இலங்கைக்கு உதவும் என்று ஜப்பான் குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்திருந்தது. எனினும் இந்த தீர்மானம் இலங்கைக்கு உதவாது என்பதை ஜப்பான் பின்னர் புரிந்து கொண்டது.

இந்த நிலையிலேயே தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் கலந்துக் கொள்ளவில்லை என்று ராஜபக்சேவிடம் கிஹாரா கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ராஜபக்ச, இதனை மற்ற நாடுகளுக்கும் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை வைத்ததோடு, சர்வதேச விசாரணையை தவிர ஐ.நா.வின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்ற தயார் என்றார்.

ஐ.நா.வின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இறுதிக் கட்டப்போரில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
President Mahinda Rajapaksa has said Sri Lanka is in the process of implementing all demands made by the sponsors of the UNHRC resolution against it except for allowing an international probe into alleged human rights violations during the last phase of the war with the LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X