ஒருவாரம் முடங்குகிறதா இலங்கை? கடும் பொருளாதார நெருக்கடியால் உயர்மட்ட அளவில் தீவிர ஆலோசனை
கொழும்பு: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆக்ரோஷத்துடன் போராட வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் நோக்கில் இலங்கையை ஒருவாரம் முடக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உயர்மட்ட அளவில் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்துள்ளது. பிற நாட்டு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு சரிந்துள்ளது. இது இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கி போட்டுள்ளது.
இதனால் அங்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் போராட்டம்
இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். தற்போது தலைநகர் கொழும்புவில் உள்ள காலே ரோட்டில் அமைந்திருக்கும் காலிமுகத்திடலில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இங்கு இரவு பகலாக போராட்டம் தொடர்கிறது. இங்கு ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

திவாலாகிறதா இலங்கை
அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்த நிலையில் பிற நாடுகளின் உதவியை இலங்கை எதிர்நோக்கி உள்ளது. இருப்பினும் இந்தியா உள்பட பிற நாடுகளிடம் இருந்து போதியளவில் உதவிகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடன் தொகைக்கான வட்டியை செலுத்துவதில் சீனாவும், இலங்கைக்கு சலுகை வழங்கவில்லை. இதனால் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏறக்குறைய திவாலாகும் நிலையில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை
இதனால் தான் வெளிநாடுகளுக்கான கடன், வட்டி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியுள்ளது. இந்த நிதியத்துடன் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏப்ரல் 18ல் பேச்சவார்த்தை துவங்க உள்ளது. இதற்காக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கே, நிதி அமைச்சரின் செயலாளர் மகிந்த சிறிவர்தனா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு வாஷிங்டன் புறப்பட்டு செல்ல உள்ளது.

உடனடி உதவிக்கு வாய்ப்பில்லை
இருப்பினும் இலங்கையின் சர்வதேச நாணய நிதியின் உதவியும் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் பெட்ரோல், டீசல் மண்ணெண்ணய், எரிவாயு சிலிண்டர், அரிசி, பருப்பு உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பொதுமக்கள் இன்னும் ஆக்ரோஷமாக போராட்டத்தில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகிறது. இது அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தலைவலியை ஏற்படுத்தலாம். இதை தடுக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருகிறது.

ஒருவாரம் முடக்க திட்டம்
அதன்படி இலங்கையை ஒருவாரம் முடக்க அரசின் உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எரிபொருள், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்த ஆலோசனையில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் நிலையில் அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications