தினேஷ் கார்த்திக் சொன்னது சரிதான்! இக்கட்டிலும் முழு சப்போர்ட்! அந்த ஒரு வார்த்தை! கலங்கடித்த ரோஹித்
சிட்னி: இந்தியாவில் மூத்த வீரர்கள் கொஞ்சம் லேசாக சொதப்பி வந்தாலும் கூட கேப்டன் ரோஹித் சர்மா அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்து வருகிறார். இன்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாமல் அதே அணி களமிறக்கப்பட்டு உள்ளது.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி 20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இறங்கி உள்ளது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்து உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் இன்று நடக்கும் மேட்சில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணியில் "கம்பேக்" தரும் முக்கிய ஆல் ரவுண்டர்.. இன்று அணியில் முக்கிய மாற்றம்! தமிழருக்கு செக்

பிளேயிங் லெவன்
இதனால் இன்று ஆடும் இந்தியாவில் ரோஹித் சர்மா (சி), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்று களமிறங்கி உள்ளனர். இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்ட படியே அக்சர் பட்டேல் களமிறங்கி உள்ளார். தீபக் ஹூடா நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் தினேஷ் கார்த்திக், கே எல் ராகுல் இருவரும் நீக்கப்படவில்லை.

கோரிக்கை
இரண்டு பேரையும் நீக்க வேண்டும் என்று இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். ராகுல் மோசமான பார்மில் இருக்கிறார். அவர் சரியாக ஆடுவது இல்லை. அதனால் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன . தினேஷ் கார்த்திக் மூன்று போட்டியில் இரண்டில்தான் பேட்டிங் இறங்கினார். அதில் ஒரு போட்டியில் 1 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இன்னொன்றில் 15 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

விமர்சனம்
இதனால் அவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனால் தினேஷ் கார்த்திகை நீக்க வேண்டும். பண்டை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்து வந்தனர். ஆனால் இன்று நடக்கும் போட்டியில் இரண்டு பேருக்குமே ரோஹித் சர்மா வாய்ப்பு வழங்கி உள்ளார். தினேஷ் கார்த்திக்கை நம்பி அணியில் எடுத்துள்ளார். கடந்த போட்டியில் அவருக்கு முதுகிலும் வலி ஏற்பட்டது.

வலி
ஆனாலும் அவர் பிட்னஸுடன் இருப்பதால் அவரை அணியில் எடுத்துள்ளார். தனது அணி வீரர்கள் மீது ரோஹித் சர்மா வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டி உள்ளது. பொதுவாக இந்திய அணியில் ரசிகர்கள் பிரஷர் காரணமாக பல வீரர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். பல வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த முறை பிரஷர் காரணமாக ரோஹித் சர்மா அப்படி எந்த முடிவையும் எடுக்காமல், தனது அணி வீரருக்கு முழு ஆதரவு கொடுத்து உள்ளார்.

தினேஷ் கார்த்திக்
முன்னதாக உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் ரோஹித் சர்மா குறித்து பேசினார். அதில், நான் நிறைய விஷயங்களையோ கடந்து வந்து இருக்கிறேன். என் மீது ரோஹித் சர்மா முழு நம்பிக்கை வந்தார். எனக்காக அவர் எப்போதும் நேரம் கொடுத்தார். இந்த சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்பதை அவர் எனக்கு காட்டினார். அதற்காக நான் எப்போதும் அவரிடம் நன்றியோடு இருப்பேன், என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். அதன்படியே தற்போதும் தினேஷ் கார்த்திக்கை ரோஹித் சர்மா முழுமையாக நம்பி உள்ளார்.