சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமிராக கேள்வி கேட்ட செய்தியாளர்.. "அந்த" ஒரு பதில்.. அசால்ட்டாக பேசிய ஜிம்பாப்பே "ராசா".. சம்பவம்!

Google Oneindia Tamil News

சிட்னி: ஜிம்பாப்பே அணிக்காக சிக்கந்தர் ராசா நேற்று செய்தியாளர் சந்திப்பில் அளித்த பதில்கள் கவனம் பெற்று வருகின்றன.

நேற்று ஜிம்பாபேவிற்கு எதிராக திரில்லிங் போட்டியில் கடைசி பந்தில் 3 ரன் எடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாபே ஒப்பனர்கள் சிறப்பாக ஆடினார்கள். சியான் வில்லியம் அதிகபட்சமாக 31 ரன்கள் அந்த அணியில் எடுத்தார்.

இதனால் ஜிம்பாபே 130-8 ரன்களை எடுத்தது. இது எளிதாக எடுக்க கூடிய ரன்தான். ஈசியாக வென்றுவிடலாம் என்று அலட்சியமாக களமிறங்கியது பாகிஸ்தான். ஆனால் தொடக்கமே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி. வெறும் 4 ரன்கள் எடுத்து இருந்த பாபர் ஆஸம் அவுட்டானார்.

சிவகார்த்திகேயன் சொல்லி வாயை மூடல! அதிர்ந்து பார்த்த பாபர்.. அர்ஷ்தீப்பின் ஒற்றை பால்! என்ன நடந்தது?சிவகார்த்திகேயன் சொல்லி வாயை மூடல! அதிர்ந்து பார்த்த பாபர்.. அர்ஷ்தீப்பின் ஒற்றை பால்! என்ன நடந்தது?

 கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவர் வரை அனைத்தும் விறு விறுப்பாக சென்றது. கடைசி ஓவரில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் 9 ரன்களை மட்டுமே அந்த அணி அடித்தது. பாகிஸ்தானுக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அப்ரிடி ரன் அவுட் ஆன காரணத்தால் பாகிஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிக்கந்தர் ராசா

சிக்கந்தர் ராசா

இந்த போட்டியில் நேற்று ஜிம்பாப்பே அணிக்காக சிக்கந்தர் ராசா மிக சிறப்பாக ஆடினார், பேட்டிங்கில் 9 ரன்கள் மட்டுமே இவர் எடுத்தார். இருந்தாலும் பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஷான் மசூத், ஹைதர் அலி, ஷதாப் கான் ஆகியோர் விக்கெட்டுகளை சிக்கந்தர் ராசா எடுத்தார். அவரின் ஆட்டம் நேற்று மிக சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் மிடில் ஆர்டரை காலி செய்தது இவரின் பவுலிங் மேஜிக்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

நேற்று பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வாங்கினார். இந்த நிலையில் ஆட்டத்திற்கு பின் இவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், இந்த வெற்றி மிக சிறப்பான வெற்றி. பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உலகக் கோப்பை என்பது முக்கியமான ஒன்று. இது முக்கியமான ஸ்டேஜ். பாகிஸ்தானை இதில் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்துவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று.

பேட்டி

பேட்டி

இந்த வெற்றி எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்து உள்ளது. இது போன்ற சிறிய ஸ்கோர் போட்டிகளில் ரன்களை டிபன்ட் செய்ய நிறைய செய்ய வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். அதுதான் எங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. என்னுடைய பயிற்சியாளரிடம் நான் கேட்க போகிறேன். இதுவரை நாங்கள் பெற்ற வெற்றியில் எந்த வெற்றி சிறப்பானது என்று கேட்க போகிறேன்.

வெற்றி

வெற்றி

இது போன்ற வெற்றிகள் ஜிம்பாபே அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும்,. இன்னும் பலர் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள உத்வேகத்தை கொடுக்கும். எங்கள் நாட்டில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எங்கள் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை. இந்த வெற்றி மூலம் அவர்களின் திறமையும் வெளியே வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, என்று சிக்கந்தர் ராசா குறிப்பிட்டு இருந்தார்.

மாஸ் பதிலடி

மாஸ் பதிலடி

இந்த நிலையில் அவரிடம் செய்தியாளர் ஒருவர்.. நீங்கள் எந்த நேரத்தில் உங்கள் அணி வெல்லும் என்பதை கண்டுபிடித்தீர்கள். எந்த ஓவரில் அந்த உணர்வு உங்களுக்கு வந்தது என்று கேட்டார். ஜிம்பேபே கத்துக்குட்டி அணி என்பதால் அவமானப்படுத்தும் வகையில் இப்படி கேள்வி எழுப்பினார். இதற்கு பட்டென பதில் சொன்ன சிக்கந்தர்.. முதல் பந்தை வீசுவதற்கு முன்பே நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று அசால்ட்டாக கூறினார். அவரின் பதில் இணையம் முழுக்க பாராட்டப்பட்டு வருகிறது.

English summary
Sikandar Raza beautiful answer on Zimbabwe wins against Team Pakistan in T20 world cup
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X