சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த டீம் மட்டும் வந்தா கேம் ஓவர்.. இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்.. "டேட்டா" காட்டிய வார்னிங்

Google Oneindia Tamil News

சிட்னி: 2022 டி 20 உலகக் கோப்பை மிக சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நடந்த உலகக் கோப்பை ஆட்டங்களை விட, இந்த தொடரில் பல திருப்பங்களுக்கு, மாற்றங்களும் ஏற்பட்டு உள்ளன.

இந்த தொடரில் ஏற்கனவே பாகிஸ்தானை ஜிம்பாப்பே வீழ்த்தியது. அதன்பின் மழைக்கு இடையே நடந்த போட்டியில் இங்கிலாந்தை அயர்லாந்து வீழ்த்தியது.

அதேபோல் இலங்கையை நமீபியா வீழ்த்தியது. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியது. இதனால் தொடரில் பல எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன.

நேற்று நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய காரணத்தால் தொடரில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

'சூப்பர்மேன்' ஷர்துல்.. 'வடசென்னை தனுஷ்' சஞ்சு சாம்சன்.. போராடிய இந்திய அணி.. டாப் மீம்ஸ் இதோ! 'சூப்பர்மேன்' ஷர்துல்.. 'வடசென்னை தனுஷ்' சஞ்சு சாம்சன்.. போராடிய இந்திய அணி.. டாப் மீம்ஸ் இதோ!

இந்தியா

இந்தியா

இந்திய அணி இன்று வெற்றிபெற்றாலும், பெறவில்லை என்றாலும் செமி பைனலுக்கு செல்வது உறுதியாகி உள்ளது. இந்திய அணிக்கு ரன் ரேட் மற்றும் வெற்றி அடிப்படையில் செமி பைனல் ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஆனால் இந்திய அணி டேபிளில் இரண்டாவது வருமா, மூன்றாவது வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இங்கிலாந்து அணி வென்றதும் உடனடியாக இந்தியாவைத்தான் செமி பைனலில் எதிர்கொள்ளும் என்று கணிப்புகள் தெரிவித்தன.

 செமி பைனல்

செமி பைனல்

ஆனால் அதன்பின் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது. இதனால் இந்தியா இருந்த பி பிரிவில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்தியா இருக்கும் பி பிரிவில் தற்போது இந்தியா 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. +0.730 ரன் ரேட்டை இந்தியா கொண்டு உள்ளது. இனி தென்னாப்பிரிக்க செமி பைனலுக்கு வர முடியாது. இதனால் இன்று பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெல்லும் அணி செமி பைனல் செல்லும்.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

இதில் பாகிஸ்தான் அணிக்கு +1.117 ரன் ரேட் உள்ளது. அதேபோல் வங்கதேசம் அணிக்கு -1.276 ரன் ரேட் உள்ளது. இன்று வங்கதேசம் வென்றால் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்கும். அதுவே பாகிஸ்தான் வென்றாலும் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்கும். இன்னொரு பக்கம் ஜிம்பாப்பே அணியை இந்தியா வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும். இதன் மூலம் செமி பைனலில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.

வாய்ப்புகள் என்ன?

வாய்ப்புகள் என்ன?

ஆனால் ஒருவேளை இன்று ஜிம்பாப்பேவிற்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து, வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் வென்றால், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா இரண்டாம் இடம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியா செமி பைனலில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும். இந்திய அணி பெரும்பாலும் செமி பைனலில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவே அதிக வாய்ப்பு உள்ளது.

நியூசிலாந்து

நியூசிலாந்து

டி 20 போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்வது மிகவும் சிக்கலானது ஆகும். ஏனென்றால் டி 20 போட்டிகளில் இந்தியாவின் கை ஓங்கி இருந்தாலும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பின்னடைவையே சந்தித்து உள்ளது. டி 20 போட்டிகளில் இதுவரை 20 போட்டிகளில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டு உள்ளது. அதில் 11ல் இந்தியா வென்றுள்ளது. 9ல் நியூசிலாந்து வென்றுள்ளது. ஆனால் 2007, 2016, 2021 ஆண்டுகளில் உலகக் கோப்பைகளில் நடைபெற்ற 3 போட்டியிலும் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

அதுவே இங்கிலாந்தை அணியை இந்தியா எதிர்கொண்டால் இந்தியாவிற்கு கொஞ்சம் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுவரை 22 போட்டிகளில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொண்டு உள்ளது. அதில் 12ல் இந்தியா வென்றுள்ளது. 10ல் இங்கிலாந்து வென்றுள்ளது. 2007, 2009, 2012 ஆகிய உலகக் கோப்பை போட்டிகளில் 2ல் இந்தியா வென்றுள்ளது, 1ல் இங்கிலாந்து வென்றுள்ளது. நியூசிலாந்தை விட இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா நல்ல ரெக்கார்ட் வைத்து உள்ளது.

English summary
T 20 World Cup: Which team is easy for India in the semi final? England or New Zealand?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X