கார் விபத்து: சைமண்ட்ஸுக்கு நாடியே இல்லை.. வளர்ப்பு நாய் செய்தது என்ன?.. சாட்சியம் பரபர வாக்குமூலம்
சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கிய போது நடந்தது என்ன என்பது குறித்து நேரில் பார்த்தவர்கள் சாட்சி அளித்தனர்.
Recommended Video
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக இதுவரை 200 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளவர் சைமண்ட்ஸ். இவர் இதுவரை 200 ஒரு நாள் போட்டிகளில் 5000 ரன்களை குவித்துள்ளார். 6 சதங்களையும் 30 அரை சதங்களையும் எடுத்துள்ளார்.
இவர் 133 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக 26 முறை வெள்ளை ஜெர்ஸியில் விளையாடியுள்ளார். அதாவது 26 டெஸ்ட் மேட்ச்கள். இன்டர்நேஷனல் போட்டிகளில் சைமண்ட்ஸ் தன் திறமையை அபாரமாக வெளிப்படுத்தியிருந்தார்.

கிரிக்கெட்
கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் வர்ணனையாளராக (Commentator) பணியாற்றி வந்தார். இவர் தனது வீட்டிலிருந்து தனது இரு செல்ல நாய்களுடன் காரில் பயணம் செய்தார். அப்போது ஹெர்வி ரேஞ்ச் சாலையில் குயின்ஸ்லேண்டில் ஆலிஸ் ரிவர் பிரிட்ஜில் பயணம் செய்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது.

ரசிகர்கள்
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களையும் கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கியது குறித்து நேரில் பார்த்த பெண் ஒருவர் சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில் கார் கவிழ்ந்திருந்தது. அதில் என்ஜின் ஓடிக் கொண்டிருந்தது, ரேடியோவும் பாடிக் கொண்டிருந்தது.

2 நிமிடங்கள்
சைமண்ட்ஸ் உள்ளே இருந்தார். 2 நிமிடங்கள் கழித்துதான் அது சைமண்ட்ஸ் என எனக்கு தெரிந்தது. அவருடன் இருந்த நாய்கள் உயிருடன் இருந்தன. நானும் எனது கணவரும் சைமண்ட்ஸை காரில் இருந்து வெளியே இழுக்க முயற்சித்தோம். ஆனால் அது முடியவில்லை. நாங்கள் அவரை வெளியே இழுக்கும் போதெல்லாம் அவரது செல்ல நாய்களில் ஒன்று உறுமியது.

உயிர் இருந்தது
சைமண்ட்ஸுக்கு உயிர் இருந்தது. ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. அவரது கையில் நாடித் துடிப்பு இல்லை. மயக்கத்தில் இருந்தார் என அந்த பெண் தெரிவித்தார். சைமண்ட்ஸின் கார் நிலைத்தடுமாறி பல முறை உருண்டு போய் விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஷேன் வார்னே, ராட் மார்ஷ் வரிசையில் சைமண்ட்ஸையும் இழந்தது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications