பள்ளி மாணவி மர்ம மரணம்! வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்! பள்ளி தாளாளர், செயலாளர் அதிரடி கைது!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி மாணவியின் இறப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திரபாபு
இந்நிலையில் அப்பகுதியில் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக," சின்னசேலத்தில் காவலர்கள், காவல்துறை வாகனங்கள், பள்ளிக்கூடத்தை தாக்குவது சூறையாடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற கலவரத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ திவுகளை ஆய்வு செய்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

பிரேத பரிசோதனை அறிக்கை
மேலும் கலவரம் நிகழ்ந்த பகுதிக்கு உள்த்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு விரைந்தனர். இதனிடையே பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பள்ளி மாணவி உடலில் காயங்கள் இருந்ததாகவும் , அவரது ஆடைகளிலும் ரத்த கரைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்து இருப்பதாக தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ள நிலையில் மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக கள்ளக்குறிச்சியில் பேசிய அவர்," உளவுத்துறை முன் கூட்டியே கணித்ததால் தான் டிஐஜி தலைமையில் காவல் போடப்பட்டது.இதுபோன்ற பெரிய கூட்டம் வரும்போது காவலர்கள் தாக்கப்படுவது சகஜம்.

3 பேர் கைது
இதுபோன்ற பெரிய கலவரத்தில் உயிர்சேதம் இல்லாமல் பார்த்துக்கொண்டது பாராட்டத்தக்கது. கும்பல் இப்படி கூடியது சம்பந்தமாக விசாரணை நடக்கும். வாட்ஸ் ஆப் குரூப் பற்றி விசாரணை நடக்கும். ஒரு தனிப்பட்ட ஸ்கூலில் நடந்த விவகாரத்தை பொதுவாக வைத்து பார்க்கக்கூடாது., கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications