தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கி உள்ளார் தவெக தலைவரும், முதல்வருமான விஜய், மொத்தம் 15 பேருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி இன்று வழங்கி உள்ளார்., அதில் 11 பேர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆவர்.குறிப்பாக உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, சம்பத், வெல்லமண்டி நடராஜன், வைகைச் செல்வன் உள்ளிட்டோருக்கு தவெகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவரும், முதல்வருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பின்வருபவர்கள். துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

11 former AIADMK ministers who joined TVK appointed as Deputy General Secretaries

துணைப் பொதுச் செயலாளர்கள்:

1. MSM. ஆனந்தன் Ex Min. திருப்பூர் வடக்கு
2. M.C. சம்பத் Ex Min. கடலூர்
3. K.இராதாகிருஷ்ணன் Ex Min. உடுமலைப்பேட்டை
4. K.V.ராமலிங்கம் Ex Min. ஈரோடு மேற்கு
5. M. ஆனந்தன் Ex Min, உளுந்தூர்பேட்டை
6. கடம்பூர் ராஜு Ex Min. கோவில்பட்டி
7. K.T. பச்சைமால் Ex Min, கன்னியாகுமரி
8. வெல்லமண்டி N. நடராஜன் Ex Min. திருச்சி கிழக்கு
9. N.R. சிவபதி Ex Min, முசிறி
10. வைகைச்செல்வன் Ex Min, விருதுநகர்
11. S. வளர்மதி Ex Min, ஸ்ரீரங்கம்
12. Dr.J. சந்தீப் ஆனந்த், சென்னை
13. K.G. முத்து வெங்கடேஸ்வரன், திருப்பூர்
14. தொள்ளமூர் கண்ணன், விழுப்புரம்
15. VCR. குமரன், திருவள்ளூர்

மேலும், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான C. மகேந்திரன் மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள், பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+