இந்த விஷயம் கூட தெரியாத முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார்.. மு.க.ஸ்டாலின் கிண்டல்
Recommended Video

சென்னை: 144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது என்பது கூட தெரியாத ஒரு முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இன்று காலை நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதன்பிறகு விழாவில் அவர் பேசியதாவது:

நாங்கள் சிறைக்கு செல்ல அஞ்சாதவர்கள். ஆனால் ஊழல் செய்து சிறைக்கு போகுபவர்கள் இல்லை. அதுபோன்ற சிறையை நாங்கள் விரும்ப மாட்டோம். ஊழல் செய்து, பெங்களூர் சிறையில் உள்ளவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். விரைவில் இன்னும் பலரும் சிறைக்கு போகப்போகிறார்கள்.
144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது என்பது தெரியாமல் தமிழ்நாட்டு முதல்வர் உள்ளார். இந்த அடிப்படை கூட தெரியாத ஒரு முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார். திமுக நடத்துவது நாடகம் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், அதிமுக நடத்துவது கபட நாடகம்.
மிசா சட்டத்தையே திமுகவினர் எதிர்கொண்டவர்கள். வழக்குகளை கண்டு எங்களுக்கு கவலையில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியின்போது, 144 தடை உத்தரவு இருப்பதால்தான் துப்பாக்கி சூடு நடைபெற்ற, தூத்துக்குடிக்கு நாங்கள் போகவில்லை என்று தெரிவித்தார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications